|
|
குழந்தைசாமி.வா.செ:
டாக்டர் வா.செ.குழந்தைசாமி:
பெயர்: வா.செ.குழந்தைசாமி
புனைபெயர்: குலோத்துங்கன்
பிறந்த இடம்: வாங்கலாம்பாளையம், திருச்சி
(14.7.1929)
தொடர்புகளுக்கு:
மின்னஞ்சல்:
vck99@hotmail.com
|
|
படைப்பாற்றல்:
கவிதை, கட்டுரை
படைப்புக்கள்:
- வாழும் வள்ளுவம்
- அறிவியல் தமிழ் - 1987
- குலோத்துங்கன் கவிதைகள் -
2002
- உலகச் செவ்வியல் மொழிகளில்
வரிசையில் தமிழ் - 2005
- செவ்வியல் மொழி முதல் சேது
சமுத்திரம் வரை – 2003
- தமிழ் வளர்ச்சி (மேம்பாடு + பயன்பாடு
= வளர்ச்சி) – 2006
- தாய்மொழி பெறாததைச் சமுதாயம்
பெறாது! - 1996
ஆங்கில நூல்கள்:
-
The Immortal Kural
-
An Unending Ascent
பட்டங்கள்,
விருதுகள்:
- அறிவியல் தமிழ் என்ற நூலுக்கு
தமிழக அரசின் பரிசு - 1987
- அண்ணா விருது – ஆழ்வார்கள் ஆய்வு
மையம் - 1997
- திருவள்ளுவர் விருது ( ஒரு லட்சம்
ரூபாய், பொற்கிழி, பாராட்டுப் பத்திரம்) – தமிழக அரசு வழங்கியது
– 1999
- ராஜா சர் முத்தைய செட்டியார்
விருதும் பொற்கிழியும் - தமிழ் இசை சங்கம் - 2005
- சாகித்திய அகாதமி விருது – வாழும்
வள்ளுவம் என்ற நூலுக்கு - 1988
- செந்தமிழ்ச் செம்மல் என்ற பட்டம்
- தமிழகப் புலவர் குழு – 1996
- தமிழ்ச் செம்மல் என்ற விருதும்
பொற்கிழியும் - மதுரை காமராசர் பல்கலைக்கழகம் - 1996
- இந்திராகாந்தி தேசிய ஒருமைப்பாடு
விருதும் - 1988
- பத்மஸ்ரீ விருது – அறிவியலுக்கும்
கல்விக்கும் ஆற்றிய தொண்டினைப் பாராட்டி குடியரசுத் தலைவர்
வழங்கியது – 1992
- கலைஞர் விருது - 2008
- பத்மபூஷண் விருது – அறிவியல் -
தொழில் நுட்பம் ஆகிய இரண்டு துறைகளிலும் செய்த சேவை, படைத்த
சாதனைகளுக்காக – 2002
- பிரணவானந்த அடிகளார் விருது –
கல்வித்துறையில் ஆற்றிய சேவைக்காக- பல்கலைக்கழக மானியக் குழுமம்
வழங்கியது - 1990
இவர் பற்றி:
- இவர் இந்தியாவிலும் பின்னர்
ஜெர்மனி, அமெரிக்காவிலும் உயர்கல்வி பயின்றவர். தேசிய சர்வ தேச
அளவில் பல குழுக்களின் தலைவராகவும், உறுப்பினராகவும் அங்கம்
வகிக்கிறார். தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் தலைவராகவும், உலகத் தமிழ்
ஆய்வுக் கழகத்தின் துணைத் தலைவராகவும், தமிழக அரசின்
கலைச்சொல்லாக்கக் குழுவின் தலைவராகவும், டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர்
நூலகத்தின் தலைவராகவும் இன்னும் பல குழுக்களின் பல குழுக்களின்
உறுப்பினராகவும் இருந்து வருகிறார். இதுதவிர செவ்வியர் மொழி என்னும்
சிறப்புக்குத் தகுதியுள்ள மொழிகளைப் பரிந்துரைக்க மைய அரசின்
உள்நாட்டு அமைச்சகம் அமைத்துள்ள மொழியியல் வல்லுநல் குழுவில்
உறுப்பினராகவும், மைய அரசின் மனித வளத்துறை நிறுவியுள்ள தமிழ் மொழி
மேம்பாட்டு வாரியத்தின் தலைவராகவும் இருக்கிறார். மதுரை – காமராசர்
பல்கலைக்கழகம், சென்னை அண்ணா பல்கலைக்கழகம், இந்திராகாந்தி தேசியத்
திறந்த நிலைப் பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகங்களில்
துணைவேந்தராக இருந்த பெருமைக்குரியவர். அத்தோடு தமிழ் இணையப்
பல்கலைக்கழகத்தின் நிறுவனத் தலைவர் இவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
(1980), அழகப்பா பல்கலைக்கழகம்
(1997), பாண்டிச்சேரி
பல்கலைக்கழகம் (1997),
ஜவஹர்லால் நேரு தொழில் நுட்பப் பல்கலைக்கழகம் (1999)
உட்பட ஏழு பல்கலைக்கழகங்கள் இவருக்கு
கௌரவ டாக்டர் விருது வழங்கி கௌரவித்து உள்ளன. இவர் இதுவரை ஏழு
கவிதைத் தொகுப்புக்கள், தமிழில் பதினொரு உரைநடை நூல்கள்,
ஆங்கிலத்தில் பதினொரு உரைநடை நூல்கள், ஒரு ஆங்கிலக் கவிதை நூல்கள்
வெளியிட்டுள்ளார். ஆங்கிலத்திலும், தமிழிலும் எழுத்தாற்றல்
மட்டுமன்றி பேச்சாற்றலும் மிக்கவர். இவரது கவிதைகள், கட்டுரைகள்
உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி, பல்கலைக்கழக வகுப்புகளில் பாடமாகவும்
இடம்பெற்றுள்ளன.
|
|
|
|