|
|
நாகராஜன்.ஜி:
பெயர்: கணேச அய்யர்.நாகராஜன்
(01.09.1929 – 19.02.1981)
பிறந்த இடம்: மதுரை
|
|
படைப்பாற்றல்:
சிறுகதை, நாவல், குறுநாவல், கட்டுரை
படைப்புக்கள்:
குறுநாவல்:
நாவல்:
சிறுகதைத் தொகுப்பு:
கட்டுரை நூல்:
இவர் பற்றி:
- ஜி.நாகராஜன்
காரைக்குடியிலும் பின்னர் மதுரையிலும் ஆசிரியராகப் பணியாற்றினார்.
1950கள் முதலே சிறுகதைகள்
எழுதியிருக்கிறார். 1957ல்
ஜனசக்தி மாத இதழில் அணுயுகம் என்ற கதையை எழுதியதுடன் பிரபலமானார்.
இடதுசாரி அலையால் கவரப்பட்டு அரசியலில் முழுநேர ஈடுபாடு கொண்டவராக
செயல்ப்பட்டார். மிகச்சிறந்த ஆசிரியராக விளங்கிய நாகராஜனை
ஆராய்ச்சிப்படிப்புக்காகஅமெரிக்கா அனுப்ப கல்லூரி நிர்வாகம்
திட்டமிட்டது. ஆனால் அவர் கம்யூனிச இயக்கத்தில் சேர்ந்து வேலையை
துறந்த நாகராஜன் முழுநேர கட்சி ஊழியராக ஆனார். தனியார் பயிற்சிக்
கல்லூரிகளில் ஆசிரியராக பணியாற்றியபடி அவர் கட்சி வேலைகளில்
ஈடுபட்டு வந்தார். சிறந்த சிறுகதை எழுத்தாளர். பொதுவாக
இலக்கியத்தால் கவனிக்கப்படாத விளிம்புநிலை மனிதர்களான பாலியல்
தொழிலாளர்களையும் தரகர்களையும் கதைகளுக்குள் கொண்டுவந்தவர்.
எப்போதும் வெளிசார்ந்து மட்டும் அல்லாமல் சமூக நிலை, அதன்
மதிப்பீடுகள், விதிகள், நிறுவனங்கள், அவை வலியுறுத்தும்
கட்டுப்பாடுகளைப் பின்பற்றுதல் என அனைத்துத் தளத்திலும் விளிம்பில்
இருக்கும் மனிதர்களை எழுதிக் காட்டியவர் ஜி.நாகராஜன். கதைசொல்லும்
லாவகம், கதைக்களம், மைய நீரோட்ட வாசிப்பு மட்டுமே கொண்டவர்களைத்
திக்குமுக்காடச் செய்யும் கேள்விகள் எனப் புதுமை காட்டும் அவரது
மொத்தப் படைப்புகளும் ஜி.நாகராஜன் படைப்புகள்.
பல மக்கள் போராட்டங்களை
நடத்தியிருக்கிறார். கடைசிக்காலத்தில் மார்க்ஸிய கோட்பாட்டில்
முற்றிலும் நம்பிக்கை இழந்த நாகராஜன் மார்க்ஸிய எதிர்ப்பாளராக ஆனார்.
மார்க்ஸியம் மானுட எதிர்ப்புத்தன்மை கொண்டது என்று எண்ண
ஆரம்பித்தார். காந்திமேலும் அரவிந்தர் மேலும் பெரும் ஈடுபாடு
அவருக்கு ஏற்பட்டது.
|
|
|
|