படைப்பாற்றல்:
சிறுகதை, நாவல், குறுநாவல்கள், கட்டுரை, திரைப்படம்
படைப்புகள்:
நாவல்கள்:
- சில நேரங்களில் சில மனிதர்கள்
- ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
- ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
- கங்கை எங்கே போகிறாள்?
- காற்று வெளியினிலே...
- ஜெயகாந்தன் நாவல்கள் (5 பாகங்கள்)
- பாட்டிமார்களும் பேத்திமார்களும்
- வாழ்க்கை அழைக்கிறது
- பாவம் இவள் ஒரு பாப்பாத்தி
- அந்த அக்காவைத் தேடி
- அவர்கள் உள்ளே இருக்கிறார்கள்
- இதய ராணிகளும் இஸ்பேடு
ராஜாக்களும்
- இந்த நேரத்தில் இவள்...
- இனிப்பும் கரிப்பும்
- இன்னும் ஒரு பெண்ணின் கதை
- இறந்த காலங்கள்
- ஈஸ்வர அல்லா தேரே நாம்
- உண்மை சுடும்
- உதயம்
- ஒரு பிடி சோறு
- ஒரு மனிதனும் சில எருமைமாடுகளும்
- கழுத்தில் விழுந்த மாலை
- காப்டன் மகள்
- குருபீடம்
- சக்கரம் நிற்பதில்லை
- சினிமாவுக்குப் போன சித்தாளு
- சுந்தரகாண்டம்
- சுமை தாங்கி
- ஜய ஜய சங்கர
- தேவன் வருவாரா
- பிரம்மோபதேசம்
- பிரளயம்
- புகை நடுவினிலே
- மாலை மயக்கம்
- யாருக்காக அழுதான்?
- யுகசந்தி
- ரிஷிமூலம்
குறுநாவல்கள்:
- ஜெயகாந்தன் குறுநாவல்கள் (மூன்று
பாகங்கள்)
சிறுகதை தொகுப்புகள்:
- ஜெயகாந்தன் சிறுகதைகள்
- அப்புவுக்கு அப்பா சொன்ன கதைகள்
- ஜெயகாந்தன் முத்திரைக் கதைகள்
கட்டுரைத் தொகுப்புகள்:
- எனது பார்வையில்
- ஓர் இலக்கியவாதியின் கலையுலக
அனுபவங்கள்
- சிந்தையில் ஆயிரம் (2
தொகுப்புகள்)
- ஜெயகாந்தன் முன்னுரைகள்
- நானும் எனது நண்பர்களும்
- நினைத்துப் பார்க்கிறேன்
பயணக்கட்டுரைகள்:
திரைப்படமாக்கப்பட்ட கதைகள்:
- சில நேரங்களில் சில மனிதர்கள்
- ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
- ஊருக்கு நூறு பேர்
- உன்னைப் போல் ஒருவன்
- யாருக்காக அழுதான்
- புதுச் செருப்பு
விருதுகள்:
- ஞானபீட விருது - இந்திய அரசின்
இவ்வுயர் விருதினைப் பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர் இவர்.
- சாகித்திய அகாதமி விருது
- அக்னி அக்சர விருது
- தஞ்சைப் பல்கலைக்கழகத்தின்
ராஜராஜன் விருது
- சாகித்திய அகாதமியின் 'பெல்லோஷிப்'
கௌரவமும் பெற்றவர்.
- உன்னைப்போல் ஒருவன் - திரைப்படம்
- சிறந்த மாநில மொழத் திரைப்படத்திற்கான ஜனாதிபதி விருதில் மூன்றாம்
பரிசைப் பெற்றது.
இவர்பற்றி:
- புதுமைப் பித்தனுக்குப் பின்
சிறுகதை மன்னன் என்று பெயர் பெற்றவர். இவர் இருபதாம் நூற்றாண்டின்
தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராகப் போற்றப்படுகிறார்.
இவர் ஐந்தாம் வகுப்புடன் தன் பள்ளி வாழ்க்கையை நிறுத்திக்கொண்டவர்.
இவரது படைப்புக்கள் ஆனந்தவிகடன், கிராமஊழியன், தாமரை, சரஸ்வதி ஆகிய
பத்திரிகைகளில் வெளிவந்தன. சில நேரங்களில் சில மனிதர்கள்,
உன்னைப் போல ஒருவன் என்ற நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டு
பரபரப்பாகப் பேசப்பட்டன.
|