|
|
அழகிரிசாமி.கு:
பெயர்: கு.அழகிரிசாமி
பிறந்த இடம்: இடைச்செவல், கோவில்பட்டி (1932) |
|
படைப்பாற்றல்:
சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு
படைப்புக்கள்:
சிறுகதைத்தொகுப்புகள்:
- ராஜா வந்திருக்கிறார்
- அன்பளிப்பு
- கு.அழகிரிசாமி சிறுகதைகள்
நாவல்கள்:
- டாக்டர் அனுராதா
- தீராத விளையாட்டு
- புது வீடு புது உலகம்
- வாழ்க்கைப் பாதை
பிற படைப்புக்கள்:
கட்டுரை நூல்கள்:
- எங்ஙனம் சென்றிருந்தேன்
- காணிநிலம்
விருதுகள்:
இவர் பற்றி:
- எழுத்தாளர் மட்டுமன்றி நல்ல
மொழிபெயர்ப்பாளரும் கூட. இசையறிவும் நிரம்பப் பெற்றவர். ஒன்பது
சிறுகதைத் தொகுப்புகளும், 3
இலக்கியக் கட்டுரைகளும் படைத்துள்ளார். மலேசியாவிலும் சிலகாலம்
பத்திரிகைப்பணி ஆற்றியுள்ளார். இவருடைய சிறுகதைகள் மக்களின்
இயல்பான பேச்சு மொழியிலும், உணர்ச்சிப் பெருக்கோடும் கூடியவை.
கு.அழகிரிசாமியும், கி.ராஜநாராயணனும் நெருங்கிய நண்பர்கள். இருவரும்
ஒரே ஊரவர், சாகித்ய அகாதமி விருது பெற்றவர்கள். கு. அழகிரிசாமி
மணிக்கொடி காலத்து எழுத்தாளர். அந்த யுகத்து பிதாமகன் என்று
குறிப்பிடப்படும் புதுமைப்பித்தனுக்கும் நெருங்கிய நண்பர். சக்தி
இதழிலும் பிரசண்ட விகடனிலும் பணியாற்றியவர். அழகிரிசாமி அதிரப் பேசி
அறியாதவர். அதே போலத்தான் அவர் எழுத்தும். படாடோபமோ, பிரசங்கமோ,
உணர்ச்சி கொப்பளிக்கும் உரையாடல்களோ அவற்றில் இருக்காது. ஆனால்,
அவற்றையெல்லாம் விட அதிக ஆழத்துடன் மனசில் 'பசக்'கென்று பதிகிற
மாதிரி இருக்கும் அழகிரிசாமி சொல்வது. அது அவருக்கே கைவரப்பெற்ற ஒரு
கலை. ஏதோ மாயவித்தை போல அந்த அவரது கதையைப் படித்து முடித்தவுடன்
பத்து நிமிடத்திற்கு அந்த கதை நம்முள் விளைவிக்கும் எண்ண அலைகள்
நம்மைப் பற்றிக் கொண்டு விடும். நம் வாழ்க்கையிலும் அப்படி ஒரு
சந்தர்ப்பம் வந்தால் நாம் என்ன செய்வோம் என்று நினைக்கத் தோன்றும்.
அப்படி நினைக்கையில் அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் கதையில் அழகிரிசாமி
சொன்னது ரொம்பவும் சரியான ஒன்றாகப் புலப்படும். கு.அழகிரிசாமி
மலேசிய பத்திரிகை 'தமிழ்நேசனு'க்கு ஆசிரியராகவும் இருந்திருக்கிறார்.
இளம்வயதிலேயே மரணமடைந்துவிட்டார். கு.அழகிரிசாமியின் நிறையக் கதைகள்
'கல்கி'யில் வெளிவந்துள்ளன.
|
|
|
|