கலைமாமணி, கவிவேந்தர் கா.வேழவேந்தன்:
வேழவேந்தன்.கா:

பெயர்: கா.வேழவேந்தன்
பிறந்த இடம்: காரணி, கும்மிடிப்பூண்டி
(05.05.1936)
வசிப்பிடம்: மயிலாப்பூர்
தொடர்புகளுக்கு:
முகவரி:
78/103, டாக்டர் இராதாகிருட்டினன் சாலை,
மயிலாப்பூர், சென்னை –
600 004.
தொலைபேசி:
28475976
கைத்தொலைபேசி:
944 44 50167

 

படைப்பாற்றல்: கவிதை, கட்டுரை, சிறுகதை

படைப்புக்கள்:

கட்டுரைத் தொகுப்புகள்:

  • வெற்றிக்கு ஒரு முற்றுகை
  • தமிழா? அமிழ்தா?
  • தெரிய.... தேளிய.....
  • மனக்காட்டுத் தேனடைகள்

கவிதைத் தொகுப்புகள்:

  • அனல் மூச்சு
  • தமிழா! எங்கே போகிறாய்?
  • வேழ வேந்தன் கவிதைகள்
  • ஏக்கங்களின் தாக்கங்கள்
  • தூறலும் சாரலும்
  • வண்ணத் தோகை

சிறுகதைத் தொகுப்புகள்:

  • வேழ வேந்தன் சிறுகதைகள்

விருதுகள்:

  • கவிஞர் தாகூர் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட கவிதைப் போட்டி – முதல்பரிசு தங்கப்பதக்கம்
  • வண்ணத் தோகை கவிதைத் தொகுதி – தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசு
  • பாவேந்தர் விருது

இவர் பற்றி:

  • இவர் ஒரு வழக்கறிஞர். இவர் மாணவப் பருவத்திலேயே அறிஞர் அண்ணாவின் 'திராவிட நாடு', கலைஞரின் 'முரசொலி' – 'முத்தாரம்', பாவேந்தரின் 'குயில்', உவமைக்கவிஞர் சுரதாவின் 'காவியம்' – 'இலக்கியம்' முதலிய ஏடுகளில் கவிதை, கட்டுரை, சிறுகதைகள் எழுதிப் புகழ்பெற்றவர்.இவரது கவிதை, கட்டுரை, சிறுகதைகள் என்பன பல பரிசுகளும், விருதுகளும் பெற்றவை. தமிழ் மொழிக்காகவும், தமிழ் இனத்திற்காகவும் பலமுறை சிறுசென்றவர். கும்மிடிப்பூண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். கலைஞரது அமைச்சரவையில் தொழிலாளர் நல அமைச்சராகப் பணிபுரிந்தவர். ஜெனீவாவில் நடைபெற்ற உலகத் தொழிலாளர் மாநாட்டில் பங்கேற்றவர். 'தமிழ்த்தேன்'என்ற தமிழியக்க உணர்வூட்டும் தனித்தமிழ் ஏட்டை நடத்தி இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்தவர். நாடு முழுவதும் பல கவியரங்கங்களுக்கு தலைமையேற்று கவிதை இலக்கியம் தழைத்திடச் செய்பவர்.
     

 


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors