கலாப்ரியா:

பெயர்: சோமசுந்தரம்
புனைபெயர்: கலாப்ரியா
பிறந்த திகதி:
30.07.1950

படைப்பாற்றல்: கவிதை

படைப்புக்கள்:

கவிதைத் தொகுப்புகள்:

  • வெள்ளம் - 1973
  • தீர்த்தயாத்திரை - 1973
  • மற்றாங்கே - 1980
  • எட்டயபுரம் - 1982
  • உலகெல்லாம் சூரியன் - 1993
  • கலாப்ரியா கவிதைகள் - 1994
  • அனிச்சம் - 2000
  • வனம் புகுதல் - 2003
  • எல்லாம் கலந்த காற்று - 2008

கட்டுரைத் தொகுப்பு:

  • நினைவின் தாழ்வாரங்கள் - 2009

விருதுகள்:

  • திருப்பூர் தமிழ் சங்க பரிசு.
  • வைரமுத்துவின் கவிதைத் திருவிழாவில் சிறப்பிக்கப்பட்டது.
  • கலைமாமணி


இவர் பற்றி:

  • தமிழின் நவீன கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர். எழுபதுகளில் எழுதத் தொடங்கியவர். 'பொருநை', 'கசடதபற, வானம்பாடி, கணையாழி, தீபம் ஆகிய இதழ்களில் எழுதிவந்தார். எழுபதுகளில் எழுதத் தொடங்கிஇ குறுகிய காலத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற கலாப்ரியா கவிதைக்குள் கதையை சுருக்கி வைக்கும் முயற்சியை தொடங்கினார். பேச்சுவழக்கை கவிதைக்குள் கொண்டுவந்த கலாப்ரியாவினது கவிதைகளின் பாடுபொருளாக அடித்தட்டு மக்களும் அவர்களது வாழ்வு சார்ந்த சிக்கல்களும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அறிஞர் அண்ணாவின் இரங்கல் கூட்டத்திற்காக முதன்முதலில் கவிதை (இரங்கற்பா) எழுதிய சோமசுந்தரம், வண்ணநிலவனின் கையெழுத்துப் பத்திரிக்கையான 'பொருநை'யில் கவிதை எழுதும் போது தனக்குத் தானே 'கலாப்ரியா' என்று பெயர் சூட்டிக்கொண்டார். இந்த பெயருக்குள் சோமசுந்தரத்தின் ஒரு தலைக் காதலியின் பெயரோடு கலாப்பூர்வமானவன் என்ற அர்த்தமும் அடைக்கலம். பின்னர் 'கசடதபற'வில் கவிதைகள் வெளிவரும்போது கூர்ந்து கவனிக்கப்பட்டார். 'கசடதபற'விற்கு பின் வானம்பாடி, கணையாழி, தீபத்தில் எழுதும் போது மிகுந்த வரவேற்பைப் பெற்றார். நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் வங்கிப் பணிகளுக்கு இடையில் தன்னை சுற்றி நிகழும் விஷயங்களை கவிதைகளில் பதிவு செய்து வரும் 'கலாப்ரியா' தமிழின் நவீன கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர்

     

Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamilauthors (தமிழ் ஆதர்ஸ்).