|
|
கிருஷ்ணன்நம்பி:
பெயர்: அழகிய நம்பி
புனைபெயர்: கிருஷ்ணன் நம்பி
பிறந்த இடம்: அழகியபாண்டிபுரம், கன்னியாக்குமரி, தமிழ்நாடு
|
|
படைப்பாற்றல்:
சிறுகதை, கவிதை, குழந்தைப் பாடல்கள், கட்டுரை,
படைப்புக்கள்:
கவிதைத் தொகுப்புக்கள்:
- யானை என்ன யானை (சிறுவர் நூல்) -
1965
சிறுகதைத் தொகுப்புகள்:
- நீலக்கடல்
- காலை முதல்
- கிருஷ்ணன் நம்பி ஆக்கங்கள் (முழுத்தொகுப்பு)
இவர் பற்றி:
- சக்திபத்திரிகையில் 'நாட்டுப்பாடல்கள்'
என்ற கட்டுரையை தனது பதினாறாம் வயதில் எழுதியதோடு இவரது எழுத்துலகப்
பிரவேசம் ஆரம்பமானது. அப்போது அவர் பத்தாம் வகுப்பு
படித்துக்கொண்டிருந்தார். பின்னர் சிறுவர் பத்திரிகையான 'கண்ணனில்'
தொடர்ந்து எழுதிவந்தார். கிட்டத்தட்ட 35
பாடல்கள் வரை எழுதினார். இவரது முதல் சிறுகதை 'சுதந்திர தினம்'
1951 இல் வெளியானது.
குழந்தைகளை மையமாக வைத்தே எழுதப்பட்ட கதை அது. பின்னர் சரஸ்வதியில்
குழந்தைப் பாடல்கள் எழுதினார். 1976
இல் தனது 44
ஆவது வயதில் மரணமானார்.
|
|
|
|