|
|
கலைமாமணி, பேராசிரியர், முனைவர்
கு.ஞானசம்பந்தன்: பிறந்த
இடம்: சோழவந்தான், மதுரை மாவட்டம் |
|
படைப்புக்கள்:
- வாங்க சிரிக்கலாம்
- பரபரப்பு – சிரிசிரிப்பு
- பேசும் கலை
- உலகம் உங்கள் கையில்
- இன்றைய சிந்தனை
- வாழ்வியல் நகைச்சுவை
- சினிமாவுக்குப் போகலாம் வாங்க
- கல்லூரி அதிசயங்கள்
- இலக்கியச் சித்திரங்களும் கொஞ்சம்
சினிமாவும்
ஓலிநாடாக்கள், குறுந்தகடுகள்:
- வாங்க சிரிக்கலாம்
- சிரிக்கலாம் வாங்க
- இலக்கியமும் நகைச்சுவையும்
- சிரிப்பும் சிந்தனையும்
- வெற்றி நம் பக்கம்
விருதுகள்:
- கலைமாமணி விருது – தமிழக அரசு –
2005
- 'உவகைப் புலவர்' என்ற விருது –
அமெரிக்கத் தமிழ்ச்சங்கம்
- 'தமிழ் இயக்கத்தின் சிற்றரசு' –
தமிழக முதல்வர் டாக்டர் கலைஙர் வழங்கிய பட்டம்.
- நகைச்சுவை அரசர், நகைச்சுவைத்
தென்றல், இளைய கலைவாணர், ஸித்த பத்மஸ்ரீ ஆகிய பட்டங்கள்
பெற்றுள்ளார்.
இவர்பற்றி:
-
இவர் மதுரை தியாகராசர்
கல்லுரியின் தமிழ்த்துறை இணைப்பேராசிரியராகப் பணிபுரிகிறார். இவர்
பட்டிமன்ற நடுவராக. பேச்சாளராக பல தமிழ் இலக்கிய நிகழ்ச்சிகளில்
கலந்துகொண்டுள்ளார். 12.06.2000
முதல் ஜெயா டி.வியில் 'காலை மலர்' என்ற இவரது நிகழ்ச்சி தினமும்
காலை 8.20 க்கு ஒளிபரப்பாகி
வருகிறது. அனைத்து தொலைக்காட்சி, வானொலிகளிலும் இவரது நிகழ்ச்சிகள்
ஒளிபரப்பாகியுள்ளன. இதுதவிர விருமாண்டி, இதயத் திருடன், கைவந்தகலை,
ஆயுதம் செய்வோம், சிவா மனசுல சக்தி ஆகிய திரைப்படங்களில் நடித்தும்
உள்ளார். சிங்கப்பூர், மலேசியா, நியூயோர்க், குவைத் உள்ளிட்ட பல
நாடுகளிலும் இவர் சிறப்புச் சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார்.
|
|
|
|