ராஜகோபால்.கு.ப:

பெயர்: கு.ப.ராஜகோபால்
புனைபெயர்:
 கு.ப.ரா
பிறந்த இடம்: கும்பகோணம்-
1902

படைப்பாற்றல்: சிறுகதை, நாவல், கவிதை, வசன கவிதை, ஓரங்க நாடகம், திறனாய்வு, வாழ்க்கை வரலாறு,       
                                    மொழிபெயர்ப்பு.

படைப்புக்கள்:

சிறுகதைத் தொகுப்புகள்:

  • கனகாம்பரம்
  • கு.ப.ரா கதைகள்

நாடக நூல்:

  • அகலியை – 13 ஓரங்க நாடகங்களின் தொகுப்பு – 1964

திறனாய்வு நூல்:

  • கண்ணன் என் கவி – எழுத்தாளர் சிட்டியுடன் இணைந்து எழுதியது.
  • பாரதியே மகாகவி – எழுத்தாளர் சிட்டியுடன் இணைந்து எழுதியது.

வாழ்க்கை வரலாற்று நுல்கள்:

  • எதிர்கால உலகம்
  • ஸ்ரீ அரவிந்த யோகி
  • டால்ஸ்டாய் வாழ்க்கையும் உபதேசமும்

மொழிபெயர்ப்பு நூல்கள்:

  • டாக்டர் ஜெகில் அண்ட் மிஸ்;டர் ஹைட் என்னும் ஆங்கில நாவல் - இரட்டை மனிதன் என்னும் தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்தார்.
  • ஆறு நவயுக நாவல்கள் - சரத் சந்திர சட்டர்ஜி, சியாராம் சரண குப்தர், வி.ச.காண்டேகர், லியோ டால்ஸ்டாய், இரமேச சந்திர தத்தர் ஆகியோரது புகழ்பெற்ற நாவல்களின் மொழிபெயர்ப்பு.

 இவர்பற்றி:

  • தெலுங்கு, ஆங்கிலம்,வங்காளம்,சமஸ்கிருதம் ஆகிய பல மொழிகளும் அறிந்தவர். தமிழ்ச் சிறுகதை முன்னோடிகளில் ஒருவர். மணிக்கொடி எழுத்தாளர். நா.பிச்சமூர்த்தியும், கு.ப.ராவும் இலக்கிய இரட்டையர்கள் என்று போற்றப்பட்டுள்ளனர். கு.ப.ரா 1902 ஆம் ஆண்டு தை மாதம், பட்டாபிராமையர், ஜானகி அம்மாளுக்கு மகனாகப் பிறந்தார். மணிக்கொடி, கலைமகள், சுதந்திரசங்கு, சூறாவளி, ஹனுமான், ஹிந்துஸ்தான் முதலான இதழ்களில் கதை, கவிதை, கட்டுரை, நாடகம் எனப் பலவற்றையும் எழுதினார். 1939 இல் பாரததேவி என்ற வார இதழில் துணையாசிரியராகச் சேர்ந்தார். பாரத்வாஜன், கரிச்சான், சதயம் என்னும் புனைபெயர்களில் பல நல்ல கதைகளைப் படைத்தார். கட்டுரைகளும் எழுதினார். பின்னர் பாரதமணி என்ற இதழிலும் சிலகாலம் பணியாற்றினார். மறுமலர்ச்சி நிலையம் என்ற புத்தக நிலையம் ஒன்றையும் நடத்தினார். வானொலியில் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். தமிழிலும் ஆங்கிலத்திலும் பல கட்டுரைகளையும் மதிப்புரைகளையும் எழுதியுள்ளார். அவை இன்னும் நூல் வடிவம் பெறாதது தமிழ் இலக்கிய உலகுக்கு பெரும் இழப்பாகும். 1944 .04.27 காலமானார். தன்னுடைய இறுதிக் காலத்தில் 'வேரோட்டம்' என்ற நாவல் ஒன்றை எழுதத் தொடங்கி, ஐந்து அத்தியாயங்கள் வரை எழுதி, அதை நிறைவுசெய்யாமலேயே இறந்துபோனார். அந்த முற்றுப்பெறாத நாவல், கு.ப.ராவின் பெயரையும், பெருமையையும் தமிழ் நாவல் உலகிற்கு பறைசாற்றிக்கொண்டிருக்கிறது.