|
|
கவிஞர் முடியரசன்:
பெயர்: துரைராசு
புனைபெயர்: முடியரசன் (07.10.1920 – 03.12.1998)
பிறந்த இடம்: பெரியகுளம், மதுரை மாவட்டம். |
|
படைப்பாற்றல்:
கவிதை, புனைகதை, திரைப்படப்பாடல், வசனம்
படைப்புக்கள்:
- அன்புள்ள பாண்டியனுக்கு –
1968
- பாடுங்குயில் - 1986
- நெஞ்சுபொறுக்கவில்லையே –
1985
- மனிதனைத் தேடுகிறேன் -
1986
- தமிழ் முழக்கம் - 1999
- நெஞ்சிற் பூத்தவை – 1999
- ஞாயிறும் திங்களும் -
1999
- வள்ளுவர் கோட்டம் - 1999
- புதியதொரு விதி செய்வோம் -
1999
- தாய்மொழி காப்போம் - 2001
- மனிதரைக் கண்டுகொண்டேன் -
2005
- எக்கோவின் காதல்
- எப்படி வளரும் தமிழ் -
2001
காவியங்கள்:
- பூங்கொடி - 1964
- கவியரங்கில் முடியரசன் -
1964
- வீரகாவியம் - 1966
- ஊன்றுகோல் - 1983
கவிதைத் தொகுப்புகள்:
- காவியப்பாவை – 1960
- முடியரசன் கவிதைகள் -
1954
- கவியரங்கில் முடியரசன் -
1960
- பாடுங்குயில் - 1986
விருதுகள்:
- அழகின் சிரிப்பு என்ற கவிதை –
முதற்பரிசு – பாவேந்தரால் தேர்வுசெய்யப்பட்டது - 1950
- தமிழக அரசின் பரிசு – பூங்கொடி
என்ற காவியம் - 1966
- மாநில அரசின் விருது – முடியரசன்
கவிதைகள் - 1954
- கவியரசு என்ற பட்டம் - பறம்பு மலை
விழாவில் மாநில அரசு வழங்கியது.
- 'திராவிட நாட்டின் வானம்பாடி'
என்ற பட்டம் - அறிஞர் அண்ணா வழங்கினார் - 1957
- 'கவியரசு' என்ற பட்டம் -
குன்றக்குடி அடிகளார் பாரிவிழாவின் போது வழங்கியது – 1966
- கலைஞர் விருது – 1988
- பாவேந்தர் விருது – 1987
- கலைமாமணி விருது – 1998
- அரசர் முத்தையாவேள் நினைவுப்பரிசு
– 1993
இவர் பற்றி:
- இவருடைய பெற்றோர் பெயர்
சுப்பராயலு – சீதாலட்சுமி. இவர் ஆரம்பத்தில் காரைக்குடியில் தமிழ்
ஆசிரியராகப் பணியாற்றினார். இவரது கவிதைகளை சாகித்திய அகாடெமி
இந்தியிலும், ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது.
இவருடைய பல கவிதைகள் தமிழ் நாட்டில் பள்ளி, கல்லூரிப் பாட நூல்களில்
பாடமாக இடம் பெற்றுள்ளன. திரைத்துறையிலும் ஈடுபட்டு கண்ணாடிமாளிகை
என்னும் திரைப்படத்திற்கு கதை வசனம் மற்றும் பாடல் எழுதியுள்ளார்.
பேராசிரியர் தமிழண்ணல் அவர்களின் முயற்சியால் மதுரை காமராசர்
பல்கலைக்கழகத்தில் தமிழியல்துறையில் ஓராண்டு காலம் பணியாற்றினார்.
'வேத்தவைப் பாவலரும் வேற்றுமொழி கலக்குந்
தீத்திறக் காலை தெளிமருந்தே - மூத்த
முடியறச ரின்றி மொழிவனப்புச் செய்யும்
முடியரசன் செய்யுள் முறை'
என மொழிஞாயிறு தேவநேயப்பாவாணரால் புகழப்பெற்றவர் கவிஞர் முடியரசன்.
தமிழ்ப்பற்றும், பகுத்தறிவுக் கொள்கையும் கொண்டு பாவேந்தர் வழியில்
பாட்டுப் பறவையாயக் கவிவானில் பாடிப் பறந்த குயில் முடியரசன்.
அறிஞர் அண்ணா, பாவேந்தர் பாரதிதாசன் ஆகியோரின் தமிழ்க்கொள்கைகளை
ஏற்று இருவரின் நம்பிக்கைக்கு உரியவராக விளங்கியவர். இவருடைய
கவிதைகள் தமிழின முன்னேற்றத்திற்கு உதவுவன என நினைத்த தமிழக அரசு
இவர்தம் நூல்களை நாட்டுடைமையாக்கிக்ப் பெருமை செய்தது.
|
|
|
|