பெயர்: என்.டி.ராஜ்குமார் பிறந்த இடம்: நாகர்கோயில், தமிழ்நாடு
படைப்பாற்றல்:
கவிதை
படைப்புக்கள்:
கவிதைத் தொகுப்புகள்:
தெறி - 1997
ஒடக்கு – 1999
காட்டாளன் - 2003
ரத்த சந்தனப் பாவை – 2001
கல்விளக்குகள்
பதனீரில் பொங்கும் நிலாவெளிச்சம்
சொட்டுச் சொட்டாய் விழுகின்றன
செவ்வரளிப் பூக்கள் - 2007
இவர்பற்றி:
இவர் கவிஞர் மட்டுமன்றி நல்ல
பாடகரும் கூட. ' வந்தனம்' என்னும் நாடகக்குழுவை நடத்திவருகிறார்.
தலித் விடுதலைக்கான கோபமும் போராட்ட குணத்தின் வெளிப்பாடாகவும் பல
கவிதைகள் எழுதியுள்ளார். இவரது கவிதைத் தொகுப்புகளில் காணப்படும்
மாந்திரீக மொழியின் உக்கிரம் நிரம்பிய எண்ணற்ற கவிதைகளால் தற்போது
எழுதும் கவிஞர்களில் தனக்கென தனியான எழுத்துப் பாணியும் நவீன
கவிதைகளில் அதிகம் பயன்படுத்தப்பட்டிராத மாந்திரீக மொழியும்
கைவரப்பெற்ற கவிஞராக அறியப்படுகிறார் என். டி. ராஜ்குமார். 'தெறி'
என்ற கவிதைத் தொகுப்பு நாடகமாக்கப் பட்டதாகக் தெரிகிறது.