பேராசிரியர் முனைவர் நா. இளங்கோ:

பெயர்: நா. இளங்கோ
பிறந்த திகதி: ஏப்ரல் 29, 1959
வசிப்பிடம்: புதுச்சேரி
தொடர்புகளுக்கு:
மின்னஞ்சல்:
nagailango@gmail.com

படைப்பாற்றல்: கட்டுரை, ஆய்வுக்கட்டுரை

படைப்புக்கள்:

  • காலடியில் தலை (புதுக் கவிதை)
  • மலடியும் மழலையும் (நாட்டுப்புறவியல் ஆய்வு)
  • நாட்டுப்புறக் காதல் பாடல்களும் அகப்பொருள் மரபுகளும் (நாட்டுப்புறவியல் ஆய்வு)
  • மொழிபெயர்ப்பும் மொழிப் பயிற்சியும் (மொழித்திறன்)
  • இணர் ஆய்வுக் கட்டுரைத் தொகுப்பு (தொகுப்பாசிரியர்)
  • தமிழ் இணர் (இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள்)
  • படர்க்கை (தமிழியல் ஆய்வுக் கட்டுரைகள்)
  • பொருநராற்றுப்படை மூலமும் உரையும்
  • மலர் நீட்டம் (செம்மொழி இலக்கிய ஆய்வுகள்)
  • ஊடகங்களின் ஊடாக (ஊடகவியல் கட்டுரைகள்)

விருதுகள்:

  •  நண்பர்கள் தோட்டம் - மண்ணுரிமைக் கல்வியாளர் விருது - 2006
  •  புதுவைத் தமிழ்க்கலை மன்றம் - செந்தமிழ் ஞானச் செம்மல் விருது - 2007
  •  கிங்பிஷர் இளைஞர் விளையாட்டு மன்றம் - தமிழ்ப்பணிச் செம்மல் விருது - 2007
  •  தமிழ்ப்பொழில் இலக்கியக் கழகம் - ஆய்வுரைச் செல்வர் விருது - 2007
  •  தமிழ்நாடு, இஸ்லாமிய தமிழிலக்கியக் கழகம் - தமிழ் மாமணி விருது - 2008
  • நண்பர்கள் தோட்டம் - நற்றமிழ் நாவலர் விருது - 2009
  • சிங்கப்பூர் இலக்கிய ஆர்வலர்கள் பேரவை - இலக்கியச் செம்மல் விருது - 2009
  • புதுச்சேரி பாத்திர வியாபாரிகள் சங்கம் - செம்மொழிச் செம்மல் விருது - 2011
  • சிங்கப்பூர் தமிழிலக்கியக் களம் - இலக்கிய மாமணி விருது - 2011
  • தமிழ்த் தொண்டன் பாரதி கழகம் - தமிழ்ச் செவ்வி அறிந்தோர் விருது - 2011
  • குழந்தைகள் கலை இலக்கிய வளர்ச்சிக் கழகம் - பேரறிஞர் அண்ணா விருது -2011
  • மீனவர் கலை இலக்கிய ஆய்வு மையம் - சிங்கார வேலர் சுடர் விருது – 2012
  • கர்மவீரர் காமராசர் நற்பணி மன்றம் - காமராசர் விருது - 2012

இவர் பற்றி:

  • நா. இளங்கோ என்பவர் புதுச்சேரியைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர். தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றிருக்கும் இவர் புதுச்சேரி அரசின் பட்ட மேற்படிப்பு ஆராய்ச்சி மையத்தில் இணைப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். புதுச்சேரி அரசின் தொடக்கப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் தமிழ் வழியில் பள்ளிப்படிப்புகளை மேற்கொண்ட இளங்கோ தென்னாற்காடு மாவட்டம் மயிலம், சிவஞான பாலய சுவாமிகள் தமிழ்க் கல்லூரியில் தமிழ்ப் புலவர் படிப்பிற்கு இணையான இளம் இலக்கியம் (பி. லிட்) பட்டம் 1979 இல் பெற்றார். பின்னர் 1981 ஆம் ஆண்டில் புதுச்சேரி, தாகூர் கலைக் கல்லூரியில் தமிழ்த் துறையில் முதுகலைப் பட்டமும், 1982 இல் சென்னை மாநிலக் கல்லூரியில் ஆய்வியல் நிறைஞர் பட்டமும், 1987 ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழிலக்கியத்துறையில் முனைவர் பட்டமும் பெற்றார்.
    புதுச்சேரி மாநிலக் கலை இலக்கிய மன்றப் பொதுச் செயலாளராக இருந்தவர்.
    தமிழ்க் கவிதை உலகில் 'மலையருவி' என்ற பெயரால் அறியப்படும் கவிஞர்.
    புதுச்சேரி சமூக நீதிப் பேரவையின் நிறுவனர்களில் ஒருவர். 'முதற்குறள் ஆய்வு' எனும் தலைப்பில் ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்கான ஆய்வு மேற்கொண்டவர். 'நாட்டுப்புற வாழ்வியலில் மலடியர் பற்றிய மதிப்பீடுகளும் குழந்தைபேறு தொடர்பான நம்பிக்கைகளும் வழக்காறுகளும்' என்ற தலைப்பில் ஆய்வேடு ஒன்றை எழுதியுள்ளார். (நாட்டுப்புறவியல் பட்டயத்திற்காக சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்ட முதல் ஆய்வேடு இதுவாகும்) 'நாட்டுப்பறக் காதல் பாடல்களும் அகப்பொருள் மரபுகளும்' எனும் தலைப்பில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வினை மேற்கொண்டார்.




Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamilauthors (தமிழ் ஆதர்ஸ்).