|
|
செயப்பிரகாசம்.பா:
புனைபெயர்: சூரியதீபன்,
ஜே.பி
பிறந்த இடம்: விளாத்திக்குளம், தூத்துக்குடி மாவட்டம் (1941)
வசிப்பிடம்: சென்னை
தொடர்புகளுக்கு:
முகவரி:
R - 36, எம்.எம்.டி.ஏ.
குடியிருப்பு,
இளங்கோ வீதி,
அரும்பாக்கம்,
சென்னை – 600 106
தொலைபேசி: 919444090186
மின்னஞ்சல்:
jpirakasam@gmail.com |
|
படைப்பாற்றல்: சிறுகதை, நாவல்,
கவிதை, உருவகக் கதைகள், கட்டுரைகள், விமர்சனம்
படைப்புக்கள்:
சிறுகதைத் தொகுப்புகள்:
- ஒரு ஜெருசலேம்
- ஒரு கிராமத்து ராத்திரிகள்
- காடு
- இரவுகள் உடையும்
- விடிகிற நேரங்கள்
- புயலுள்ள நதி
கட்டுரை நூல்கள்:
- வனத்தின் குரல்
- நதிக்கரை மயானம்
- தெக்கத்தி ஆத்மாக்கள்
- ஈழக்கதவுகள்
இவர்பற்றி:
- இவரது கதைகள் 7
தொகுதிகளாக வெளிவந்துள்ளன. இலக்கிய மேடைகளிலும்,
கருத்தரங்குகளிலும் சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார். எழுபதுகளின் புகழ் பெற்ற இலக்கியப் போக்குகளில் ஒன்றான
கரிசல் இலக்கியத்தைச் செழுமைப்படுத்திய முக்கியமான சிறுகதைக்
கலைஞர்களுள் ஒருவர். வானம் பார்த்த பூமியான கரிசல் காட்டு வாழ்வின்
துயரார்ந்த பகுதிகளைக் கவித்துவம் ததும்பும் தன் படைப்பு மொழியில் 'உந்திக்கொடியோடும்
உதிரச்சேற்றோடும்' முன்வைத்தவர். 1965இல் நடந்த இந்தி எதிர்ப்புப்
போராட்டத்தில் தீவிரமாகப் பங்கெடுத்துக்கொண்ட மாணவர் தலைவர்களில்
ஒருவரான பா.செ. முதலில் கல்லூரி ஆசிரியராகச் சில ஆண்டுகள்
பணியாற்றிய பிறகு தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையில் இணை
இயக்குநராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றார். தமிழகத்தில் இயங்கிவரும்
மார்க்சிய-லெனினிய இயக்கமொன்றின் பண்பாட்டுத்தளத்தின் அமைப்பு
ரீதியான செயல்பாடுகளில் தீவிரமாகப் பங்கெடுத்துக்கொண்டதோடு அதன் கலை
இலக்கிய இதழான 'மனஓசை'க்குப் பொறுப்பேற்றுப் பத்தாண்டுகள்வரை அதனை
வெற்றிகரமாக வெளிக்கொணர்ந்தவர்.
|
|
|
|