|
|
|
புதுமைப்பித்தன்:
பெயர்: சொ. விருத்தாசலம்
(1906)
புனைபெயர்: புதுமைப்பித்தன்
பிறந்த இடம்: திருப்பாதிரிப்புலியூர், கடலூர்
|
|
படைப்புக்கள்
சில:
- கல்யாணி
- சிற்பியின் நகரம்
- ஆற்றங்கரை பிள்ளையார்
- வழி
- காஞ்சனை
- புதிய கூண்டு
- வேதாளம் சொன்ன கதைகள்
- ஒரு நாள் கழிந்தது
- கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்
- காலனும் கிழவியும்
- பொன்னகரம்
- தெருவிளக்கு
- புதுமைப்பித்தன் கதைகள் -
1, 2 (இவரது சிறுகதைகள் யாவும்
இவ்விரண்டு தொகுப்புக்களிலும் தொகுக்கப்பட்டுள்ளன.
இவர் பற்றி:
- இவருடைய முதல் சிறுகதை ஆற்றங்கரை
பிள்ளையார் என்பதாகும். சிறுகதை இலக்கிய உருவாக்கத்தில் வடிவம்,
உத்தி, தத்துவச் செறிவு, உணர்வு சுளிப்பு, சொல்லாட்சி, கலைநோக்கு
என்று பல விடயங்களைக் கையாண்டுள்ளார். 98
சிறுகதைகள் எழுதியுள்ளார். புராணக் கதைகளை நவீன சமூகக்
கருத்துக்களுக்கு ஏற்ப மீட்டுருவாக்கம் செய்துள்ளார். 1948
இல் காலமானார்.
|
|
|
|
|