ஷைலஜா:

பெயர்: மைதிலி நாராயணன்
புனைபெயர்: ஷைலஜா
பிறந்த  இடம்: ஸ்ரீரங்கம்
வசிப்பிடம்: பெங்களூர்
தொடர்புகளுக்கு:
முகவரி:
41, Second Cross Street,
Mico Layout,
BTM Second Stage,
Bangalore 5600 76
India

மின்னஞ்சல்: Shylaja01@gmail.com

படைப்பாற்றல்: சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல், ஓவியம்

படைப்புக்கள்:

சிறுகதைத் தொகுப்பு:

  • திரும்பத்திரும்ப

தொகுப்பு நூல்கள்:

  • 'மகரம்'  - சிறந்த சிறுகதை எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்பு
  • கோவை லில்லி தேவசிகாமணியின் பெண் எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்பு.
  • எழுத்தாளர் உத்தமசோழன் சிறுகதைகளின்  தொகுப்பு.

விருதுகள்:

  • அமரர் கல்கி நினைவு சிறுகதைப் போட்டி - மூன்றாம் பரிசு
  • அமுதசுரபியில் சின்னிக்ருஷ்ணன் சிறுகதைப் போட்டி - ஆறுதல் பரிசு
  • இலக்கியபீடம் சிறுகதைப் போட்டி – ஆறுதல் பரிசு
  • இலக்கியபீடம் அமரர் ரங்கநாயகி நினைவு நாவல் போட்டி – முதல்பரிசு
  • தினமலர் சிறுகதைப் போட்டி – ஆறுதல் பரிசு
  • கலைமகள் - கிவாஜ சிறுகதைப் போட்டி – சிறந்த சிறுகதைக்கான பரிசு
  • கலைமகள் - ரசவாதி நினைவுச் சிறுகதைப் போட்டி - இரண்டாம் பரிசு
  • மஞ்சரி – அமரர் தேவன் நினைவுப்பயணக்கட்டுரை - இரண்டாம் பரிசு
  • பொதிகை தொலைக்காட்சி பொங்கல்தின சிறந்த விமர்சனக் கட்டுரை - இரண்டாம் பரிசு
  • இணையத்தளங்கள் - தமிழுலகம் நடத்திய தொடர்கதைப் போட்டி - இரண்டாம் பரிசு
  • அன்புடன் குழுமம் நடத்திய கவிதைப் போட்டி - மூன்றாம்பரிசு
  • இணையத்தளத்தின் வவாசங்கம் நடத்திய கட்டுரைப் போட்டி – சிறப்புப் பரிசு
  • புதிவர் நடத்திய வெண்பா கவிதைப் போட்டி - இரண்டாம்பரிசு

இவர் பற்றி:

  • இவர் ஒரு எழுத்தாளர் மட்டுமன்றி நல்ல பாடகியும், நடிப்பாற்றல் மிக்கவரும் ஆவார். சிறந்த அறிவிப்பாளராகவும் விளங்கியவர். கனடாவிலிருந்து இணையம் வழி ஒலிபரப்பான பண்பலையில் அறிவிப்பாளராகக் கடமையாற்றியவர். இவர் இதுவரை 250 க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 12 நாவல்கள், 2 குறுநாவல்கள், 5 கட்டுரைகள், 12 வானொலி நாடகங்கள், 3 தொலைக்காட்சி நாடகங்கள் எழுதியுள்ளார். உனக்காக ஒரு உள்ளம் - தினபூமி, மலர்ந்த மனம் - தினச்சுடர் பத்திரிகை, கண்ணோடு காண்பதெல்லாம் - கலைமகள், வானைத் தொடலாம் வா – ஆனந்த விகடன், பெங்களூர் பயங்கரம் - மாலைமதி, காலமெல்லாம் காத்திருப்பேன் - மாலைமதி, காதலை எண்ணிக்களிக்கின்றேன் - மாலைமதி, வாழலாம் வா – கதைமலர், காத்திருக்கிறேன் வா – குடும்பநாவல், ஆசைக்கிளியே அழகியரதியே – குங்குமச் சிமிழ், திக்குத்தெரியாத காட்டில் - இலக்கியபீடம் என்பன இவர் எழுதிய நாவல்களும், அவை வெளியாகிய பத்திரிகைகளுமாகும். நீயே காளி என்னும் குறுநாவல் ஓம் சக்திபத்திரிகையிலும், அன்பிற் சிறந்த தவமில்லை மங்கையர்மலரிலும் வெளிவந்த குறுநாவல்கள். இதுமட்டுமன்றி இணையத்தளத்தில் கல்கியின் அலைஓசை நாவலை தன்னுடைய குரல்பதிவில் செய்துவருகிறார். தமிழ்மீடியா என்னும் பண்பலைத்தளத்தில் குரல்வழியாக இனிக்கும் இலக்கியம் சொல்கிறார்.   தற்போது சில விளம்பரப் படங்களுக்கும், குறும்படங்களுக்கும் பின்னணிக் குரல் கொடுத்து வருகிறார். இவரது சிறுகதைகள் சில கன்னட மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.