சிற்பி:

பெயர்: பொ.பாலசுப்பிரமணியம்
புனைபெயர்: சிற்பி
பிறந்த இடம்: ஆத்துப்பொள்ளாச்சி, பொள்ளாச்சி, கோவை
(29.7.1936)

படைப்புக்கள்:

கவிதைத் தொகுப்புகள்:

  • நிலவுப்பூ - 1963
  • சிரித்த முத்துக்கள் - 1968
  • ஒளிப்பறவை – 1971
  • சர்ப்பயாகம் - 1976
  • புன்னகை பூக்கும் பூனைகள் - 1982
  • மேளன மயக்கங்கள் - 1982
  • சூரிய நிழல் - 1990
  • இறகு -  1996
  • சிற்பியின் கவிதை வானம் - 1996
  • பாரதி என்றொரு மானுடன்- 1997
  • ஒரு கிராமத்து நதி - 1998
  • மருத வரை உலா – 1998
  • நாவரசு - 1998
  • பூஜ்யங்களின் சங்கிலி – 1999
  • பெருமூச்சுக்களின் பள்ளத்தாக்கு - 2001
  • அருட்பா அமுதம் – 2001
  • படைப்பும் பார்வையும் - 2001
  • கவிதை மீண்டும் வரும் – 2001
  • நேற்றுப் பெய்த மழை - 2003
  • மூடுபனி - 2003
  • காற்று வரைந்த ஓவியம் - 2005
  • தேவயானி – 2005
  • மகாத்மா – 2006
  • தொண்டில் கனிந்த தூரன் - 2006

மொழிபெயர்ப்புக்கள்:

  • தேனீக்களும் மக்களும்  - 1982
  • அக்கினிசாட்சி - 1996 -  மொழிபெயர்ப்பு நாவல்
  • A Noon in Summer 1996 -  சிற்பி கவிதைகளின் மொழிபெயர்ப்பு
  • சச்சிதானந்தன் கவிதைகள்- 1998
  • உஜ்ஜயினி – 2001
  • வாரணாசி - 2005
  • சாதனைகள் எப்போதும் சாத்தியம்தான் - 2006

கட்டுரைத் தொகுப்புக்கள்:

  • மகாகவி பாரதி – சில மதிப்பீடுகள் - 1982
  • இலக்கியச் சிந்தனை – 1989
  • மலையாளக் கவிதை – 1990
  • ஆதிரை – 1992
  • இல்லறமே நல்லறம் - 1992
  • பாரதி – பாரதிதாசன் படைப்புக்கலை – 1992
  • திருக்குறள் சிற்பி உரை - 2001
  • தமிழ் உலா – 1,2 – 1993
  • அலையும் சுவடும் - 1994
  • மின்னல் கீற்று - 1996
  • சிற்பியின் கட்டுரைகள் -  1996
  • இராமாநுசர் வரலாறு - 1999
  • பாரதியார் கட்டுரைகள் - 2002
  • இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதை - 2006
  • கொங்கு களஞ்சியம் - 2006

சிறுவர் நூல்கள்:

  • சிற்பி தரும் ஆத்திசூடி- 1993
  • வண்ணப்பூக்கள் – 1994

விருதுகள்:

  • சாகித்திய அகாதெமி விருது – 2001, 2003
  • தமிழக அரசின் பாவேந்தர் விருது
  • அரசர் முத்தையாவேள் பரிசில்
  • கலைமாமணி விருது
  • கபிலர் விருது

இவர் பற்றி:

  • இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டத்தினையும், சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும் பெற்றவர். பொள்ளாச்சி நல்லமுத்துக் கவுண்டர் மாகலிங்கம் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணிபுரிந்தவர். பின்னர் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்.  தமிழ், ஆங்கிலம், மலையாளம், உருசியன் உள்ளிட்ட பலமொழிகளையும் அறிந்தவர். சிறந்த கவிஞராகவும். இலக்கிய இதழாசிரியராகவும், பன்னூலாசிரியராகவும் விளங்குகிறார் கவிஞர் சிற்பியவர்கள். வானம்பாடி கவிதை இயக்கத்தில் பெரும்பங்காற்றினார். வானம்பாடி, அன்னம்விடுதூது, வள்ளுவம், கவிக்கோ உள்ளிட்ட பல ஏடுகளிலும் ஆசிரியர் குழுவில் பணிபுரிந்தவர். இவருடைய கவிதைகள் ஆங்கிலம், கன்னடம், இந்தி, மலையாளம், மராத்தி மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.




Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.