சூடாமணி.ஆர்:

பெயர்: ஆர்.சூடாமணி
புனைபெயர்:  சூடாமணி ராகவன்
பிறந்த இடம்:  சென்னை
(1931 – 13.09.2010)
தொடர்புகளுக்கு:
முகவரி:
புதிய எண் -
27
டாக்டர் அழகப்பா சாலை, சென்னை
600 084

 

படைப்பாற்றல்: சிறுகதை, நாவல், கட்டுரை

படைப்புக்கள்:

சிறுகதைத் தொகுப்புகள்:

  • காவேரி – 1957
  • சூடாமணியின் கதைகள்

நாவல்கள்:

  • மனதுக்கு இனியவள் - 1960
  • உள்ளக் கடல்

விருதுகள்:

  • காவேரி -சிறுகதை – கலைமகள் வெள்ளிவிழா பரிசு – 1957
  • மனத்துக்கு இனியவய் - நாவல் – கலைமகள் ஸ்ரீ நாராயணசாமி ஐயர் பரிசு – 1959
  • இருவர் கண்டனர் - நாடகம் ஆனந்தவிகடன் நாடகப் போட்டி - இரண்டாம் பரிசு – 1961
  • பம்பாய் தமிழ்ச் சங்கப் பரிசு
  • தமிழக அரசுப் பரிசு
  • இலக்கியச் சிந்தனைப் பரிசு
  • லில்லி தேவசிகாமணி பரிசு

இவர்பற்றி:

  • சிறுகதை, நாவல், நாடகம் அடங்கிய 35 நூல்கள் வெளியாகியுள்ளன. சில கதைகள் ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. தமிழக பெண் எழுத்தாளர். உளவியல் எழுத்தாளர் எனப் புகழப்பட்டவர். ஏராளமான சிறுகதைகளையும், நாவல்களையும் எழுதியிருக்கிறார். கலைமகள், சுதேசமித்திரன், தினமணிக்கதிர், கல்கிம, விகடன் முதலான பத்திரிகைகளில் இவரது படைப்புக்கள் வெளியாகியுள்ளன. சூடாமணி ராகவன் என்ற பெயரில் ஆங்கிலத்திலும் ஆக்கங்களைப் படைத்து உள்ளார்.   இருவர் கண்டனர் என்ற இவர் எழுதிய நாடகம் பலமுறை மேடைகண்டது. பல இலக்கிய விருதுகளைப் பெற்ற ஆர். சூடாமணி ஆரவாரம் இல்லாமல், மிக எளிமையாக, மத்திய தர வாழ்க்கையையும் அதன் மனிதர்களையும், குறிப்பாக பெண்களையும் பற்றி நிறைய எழுதியுள்ளார். இரவுச்சுடர் என்ற இவரது கதை 'யாமினி' என்ற பெயரில் 1996 ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. 'சூடாமணியின் கதைகள்' என்கிற பெயரில் இவரது சிறுகதைகளின் தொகுப்பொன்று வெளிவந்தது.  நூற்றுக்கும் அதிகமான சிறுகதைகளை எழுதியுள்ளார். 1950-60களில் நடுத்தர வர்க்கத்துப் பெண்களின் உணர்ச்சிகளை அடக்கத்துடன் சித்திரித்தவர்களாக அநுத்தமா, ராஜம் கிருஷ்ணன், ஆர். சூடாமணி ஆகிய மூவரையும் சொல்லலாம். அவர்களில் சூடாமணியின் எழுத்து, எண்ணங்களை அவற்றின் ஆழத்தில் அவதானிக்கும் தன்மையுடையதாக இருந்தது.  பிரபல எழுத்தாளர் ருக்மிணி பார்த்தசாரதி இவரது சகோதரி ஆவார். இன்னொரு சகோதரி பத்மாசனி சிறந்த மொழிபெயர்ப்பாளர். பாட்டி ரங்கநாயகி அம்மாளும் சிறந்த எழுத்தாளரே.