தற்காலப் பெண்ணுடல் ஆவணப் போக்கின் ஆரம்பச் சொல் சுகந்தி
சுப்ரமணியன். இவருடைய கவியுலகம் ஆரவாரமற்ற எளிய சொற்களால்
தீட்டப்படுகின்றன. அன்றாடக் குடும்ப புறச்சூழலில் எதிர்ப்படும்
பெண்மைக்கு நேரும் இடர்ப்பாடுகளாகப் பேசத் தொடங்கிய சுகந்தி, குடும்ப
அமைப்பிற்கு வேறான ஒரு 'வெளி'யைப் பெண்ணுலக உட்டோபியாவாக
உருவாக்கினார். அதைத் தன் கவிதையின் சாரமாகவே பதியவைக்கத் தொடங்கி
வெற்றியும் கண்டிருக்கிறார். நவீன கவிதையில் பெண்ணிருப்பின் முதல்
அடையாளங்கள் பதிவான தொகுப்பாக இவரது புதையுண்ட வாழ்க்கை என்ற கவிதைத்
தொகுப்பு அமைகிறது.இவர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின் மனைவி. சுகந்தி
காலமாகிவிட்டார்.