தேனி.மு.சுப்பிரமணி: பெயர்: மு.சுப்பிரமணி
பெற்றோர்
:
சு.முத்துசாமி -மு.கமலம்
மனைவி பெயர்: உ. தாமரைச்செல்வி
மகள் பெயர்
:  மு.சு.முத்துக்கமலம்
பிறந்த இடம்:
தூத்துக்குடி
வதிவிடம்:
பழனிசெட்டிபட்டி,தேனி
தொடர்புகளுக்கு:
முகவரி:
19/1,சுகதேவ்தெரு,                        பழனிசெட்டிபட்டி,
தேனி
625 531.
தமிழ்நாடு,இந்தியா.

தொலைப்பேசி
: 9940785925,9042247133.
E.mail:msmuthukamalam@gmail.com,
msmuthukamalam@yahoo.co.in  
www.muthukamalam.com   

தமிழ் இலக்கிய ஆர்வப் பங்களிப்புகள்

வெளியான படைப்புகள்:

  • தமிழில் வெளியாகும் பல்வேறு முன்னிலை அச்சிதழ்களில் தேனி. எம். சுப்பிரமணி, முத்துக்கமலம், உ.தாமரைச்செல்வி எனும் பெயர்களில் 4000க்கும் அதிமான துணுக்குகள் மற்றும் சிரிப்புகள், 600க்கும் அதிகமான கட்டுரைகள் மற்றும் பேட்டிக் கட்டுரைகள், 100க்கும் அதிகமான கணினி, இணையம் தொடர்பான கட்டுரைகள், 22 சிறுகதைகள், 260க்கும் அதிகமான புதுக்கவிதைகள் வெளியாகியுள்ளன.

அச்சிதழ்களில் வெளியான தொடர்கள்

  • 1.தினத்தந்தி நாளிதழின் செவ்வாய்க் கிழமை இணைப்பு இதழான ஆன்மிக மலரில் அற்புத மகான்கள் எனும் தலைப்பிலான ஆன்மிகத் தொடர் 23-08-2011 முதல் 18-09-2012 வரை 57 வாரங்கள் வெளியாகிப் பலரது பாராட்டைப் பெற்றது. 

  • 2.தமிழ் கம்ப்யூட்டர் மாதமிருமுறை இதழில் விக்கிப்பீடியாவில் எழுதலாம் வாங்க எனும் கணினி தொழில்நுட்பத் தொடர் ஜனவரி 1-15, 2013 இதழ் முதல் டிசம்பர் 16-31, 2013 வரை  வெளியானது.

எழுதி வெளியாகியுள்ள நூல்கள்:

  • 1.தமிழ் இணையச் சிற்றிதழ்கள் (சிதம்பரம், மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு, நவம்பர்’ 2010) (கணினி, இணையம் மற்றும் இதழியல்)

  • 2.தமிழ் விக்கிப்பீடியா (சிதம்பரம், மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு, நவம்பர்’ 2010) (கணினி, இணையம்) - இந்நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின் கணினியியல் பிரிவில் சிறந்த நூலுக்கான பரிசு பெற்றது.

  • 3.சுவையான 100 இணையதளங்கள் (சென்னை, கௌதம் பதிப்பகம் வெளியீடு, டிசம்பர்’2010) (கணினி, இணையம்)

  • 4.மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (சென்னை, கௌதம் பதிப்பகம் வெளியீடு, ஆகஸ்ட்’2011.) (கணினி, இணையம்)

  • 5.மகளிருக்கான 100 இணையதளங்கள் (சென்னை, கௌதம் பதிப்பகம் வெளியீடு, நவம்பர்’2011) (கணினி, இணையம்

  • 6.அதிசயங்கள்! உலக அதிசயங்கள்! (சென்னை, தரணீஷ் பப்ளிகேசன்ஸ்  வெளியீடு,ஜூலை’2012) (கட்டுரை)

  • 7.அற்புத மகான்கள் (சென்னை, கௌதம் பதிப்பகம் வெளியீடு, டிசம்பர்’2013)  (ஆன்மிகம், கட்டுரை)

அச்சிலுள்ள நூல்கள்:

  • 1. இந்திய தேசியப் பூங்காக்கள்

  • 2. உலகச் சிறப்பு நாள்கள்

  • 3. விக்கிப்பீடியாவில் எழுதலாம் வாங்க!

  • 4. ஸ்ரீ நாராயணகுரு

  • 5. பயனுள்ள 100 இணையதளங்கள்

  • 6. வேடிக்கையான 100 இணையதளங்கள்

  • 7. சாப – விமோசனக் கதைகள்

  • 8. உடல் நலத்திற்கு உதவும் இணையதளங்கள்.

  • 9. இணைய இதழியல்

  • 10. நல்ல பெயர் வாங்கலாம்!
     

தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்பு:

  • இணையக் கலைக்களஞ்சியமான தமிழ் மொழியிலான விக்கிப்பீடியாவில் (www.ta.wikipedia.org) 2008 ஆம் ஆண்டு திசம்பர் 14ல் பயனராக இணைந்து, பல்வேறு பங்களிப்புகளுக்குப் பின்பு, 2011 ஆம் ஆண்டு ஜூன் 26 ல் பயனர் நிர்வாகியாக வாக்கெடுப்பின் வழியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ் விக்கிப்பீடியாவில் ஆயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளைத் தொடங்கியதுடன், 20 ஆயிரத்துக்கும் அதிகமான தொகுப்புகளைச் செய்து சிறப்பு பெற்றிருக்கிறார்.

தமிழ் இணைய மாநாட்டுப் பங்களிப்புகள்:

  • 1.தமிழ்நாடு அரசு கடந்த 2010 ஆம் ஆண்டு சூன்மாதம் நடத்திய உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுடன் இணைந்து நடத்தப் பெற்ற ஒன்பதாவது தமிழ் இணைய மாநாட்டில் 24-06-2010 அன்று உமர்தம்பி அரங்கில் மூன்றாவது அமர்வில் தமிழ் மின் தரவு மற்றும் மின்னகராதிகள் எனும் தலைப்பிலான ஆய்வரங்கில் தமிழ் விக்கிப்பீடியா எனும் கலைக்களஞ்சியம் எனும் தலைப்பில் கட்டுரை வாசிப்பு.

  • 2.இம்மாநாட்டில் 26-06-2010 அன்று யாழன் சண்முகலிங்கம் அரங்கில் கணினி மொழியியல் எனும் தலைப்பிலான நான்காவது அமர்வில் சென்னை, பத்ரி சேசாத்திரி தலைமையில் நடைபெற்ற வலைப்பூக்கள் மற்றும் விக்கிப்பீடியா குறித்த கலந்துரையாடல் நிகழ்வில் தமிழ் விக்கிப்பீடியா சார்பில் பங்களிப்பு.

பிற பங்களிப்புகள்:

  • 1.தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 25-02-2011 அன்று நடத்தப் பெற்ற பல்வேறு துறை அரசு அலுவலர்களுக்கான ஆட்சி மொழிக் கருத்தரங்கில் இணையத்தில் ஆட்சித் தமிழ் எனும் பெயரிலான உரை.

  • 2.மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் இணைய வழியில் மாவட்ட ஆட்சித் தலைவருக்குப் புகார் அளிக்கும் தொடுவானம் திட்டத்திற்கான பங்களிப்புகள் மற்றும் கிராம மக்களுக்கான இணைய வழி புகார் அளிக்கும் சிறப்புப் பயிற்சித் திட்டத்தில் 16-07-2011 அன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பயிற்சியில் பயிற்றுநராகப் பங்களிப்பு.

  • 3.திருச்சி மாவட்டம், புத்தனாம்பட்டி, நேரு நினைவுக் கல்லூரியில் பல்கலைக்கழக மானியக் குழுவின் 11-வது திட்டத்துடன் இணைந்த அரசுப் பணி நுழைவுத் திட்டங்களுக்கான பயிற்சி வகுப்புகளில் 09-03-2012 அன்று போட்டித் தேர்வுகளுக்கு உதவும் இணையதளங்கள் எனும் தலைப்பில் உரை மற்றும் செயல்முறைப் பயிற்சி அளித்துப் பங்களிப்பு.

  • 4.கணினித் தமிழ்ச் சங்கம், மதுரைக் கிளை மற்றும் சென்னை, டோவ் மல்டி மீடியா நிறுவனம் இணைந்து 02-08-2012 அன்று மதுரையில் நடத்திய தமிழ் விக்கிப்பீடியா பயிற்சி பட்டறையில் உரை மற்றும் செயல்முறைப் பயிற்சி அளித்துப் பங்களிப்பு.

  • 5.கணினித் தமிழ்ச் சங்கம், மதுரைக் கிளை மற்றும் சென்னை, டோவ் மல்டி மீடியா நிறுவனம் இணைந்து, 04-08-2012 அன்று தேனியில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக நடத்திய கணினித் தமிழ்த் தட்டச்சுப் பயிற்சி முகாமில் கணினியில் தமிழ்த் தட்டச்சுக்கான எளிய முறைகள் எனும் தலைப்பில் உரை மற்றும் செயல்முறைப் பயிற்சி அளித்துப் பங்களிப்பு.

  • 6. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை, திருச்சி, திருவரங்கத்தில் 22-09-2012 முதல் 28-09-2012 வரை நடத்திய 32 மாவட்டங்களில் தேர்வு பெற்ற மாணவர்களுக்கான இளந்தமிழர் இலக்கியப் பட்டறை எனும் சிறப்பு நிகழ்ச்சியில் 28-09-2012 அன்று இணையத் தமிழ்ப் படைப்பாக்கம் எனும் தலைப்பில் உரை மற்றும் பயிற்சி அளித்துப் பங்களிப்பு.

  • 7. கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி, நாகர்கோவில், அண்ணா பல்கலைக்கழகம், திருநெல்வேலி மண்டலம், இணைந்து 23-01-2013 அன்று நாகர்கோவில், பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரியில் நடத்தப் பெற்ற, கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கான விக்கி கன்யா நிகழ்ச்சியில் தமிழ் விக்கிப்பீடியா குறித்து உரை மற்றும் செயல்முறைப் பயிற்சி அளித்துப் பங்களிப்பு.

  • 8.தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை, சென்னை, அடையாறு, இந்திரா நகர் இளைஞர் விடுதியில் 01-08-2013 முதல் 07-08-2013 வரை நடத்திய 32 மாவட்டங்களில் தேர்வு பெற்ற மாணவர்களுக்கான இளந்தமிழர் இலக்கியப் பட்டறை எனும் சிறப்பு நிகழ்ச்சியில் 03-08-2013 அன்று இணையத் தமிழ் எனும் தலைப்பில் உரை மற்றும் பயிற்சி அளித்துப் பங்களிப்பு.

  • 9.கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு எக்செல் பள்ளிகளில் 10-08-2013 அன்று நடைபெற்ற மாணவர் மன்றங்கள் தொடக்க விழா நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இந்தியாவின் முதல் விக்கிப்பீடியா மாணவர் மன்றத்தைத் தொடங்கி வைத்துச் சிறப்புரை.

  • 10.திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தில் 28-02-2014 அன்று இந்திய மொழிகளுக்கான மொழியியல் தரவு சேர்த்திய நிதி நல்கையில் நடத்தப் பெற்ற உலகமயமாதல் பின்னணியில் வளர்ந்து வரும் தமிழ் கணினி முயற்சிகள் - பயிலரங்கம் நிகழ்வில் தமிழ் விக்கிப்பீடியா - அறிமுகம் எனும் தலைப்பில் பயிற்சியளித்து உரை.

  • 11.திருச்சிராப்பள்ளி, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழாய்வுத் துறை 06-03-2014 அன்று செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் நிதி நல்கையில் மின் ஊடகங்களில் பழந்தமிழ் இலக்கியப் பனுவல்கள் பயிலரங்கம் நிகழ்வில் மின் களஞ்சியம் - விக்கிப்பீடியா எனும் தலைப்பில் பயிற்சியளித்து உரை.

தமிழ் இலக்கியப் பங்களிப்பு:

  • இந்திய அரசின் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிதியுதவியுடன் சென்ன, சங்கம் தமிழ் அறக்கட்டளை மேற்கொண்டு வரும் 'சங்கத் தமிழ்ப் பெண்பாற் புலவர் பாடல்கள்' எனும் தலைப்பில் இசைத் தமிழ் வடிவில் சங்கத்தமிழ்ப் பெண்பாற் புலவர்களின் பாடல்கள் மற்றும் விளக்க உரை போன்றவற்றைக் குறுந்தகடுகளாக வழங்கும் திட்டத்தின் முதல் பகுதியாக ஔவையார் பாடல்களில் 20 பாடல்களை இசைத்தமிழ்க் குறுந்தகடாக உருவாக்கம் செய்யும் குழுப் பணி.

பாராட்டு மற்றும் விருதுகள்:

  • 1.தமிழ்நாடு அரசின் பொது நூலகத்துறையின் வழியாக தேனி மாவட்ட நூலகம் வழங்கிய 2009 ஆம் ஆண்டின் இணைய இதழியல் துறைக்கான கலை இலக்கிய சாதனையாளர் விருது” (2009)

  • 2. சி.பா.ஆதித்தனார் இதழியல் கழகம் மற்றும் தமிழ்த்திணை இணைய இதழ் வழங்கிய தமிழ்த்திணை விருது” (2010)

  • 3.தென்தேன் தமிழ்ச்சங்கம் வழங்கிய இணைய இதழியலுக்கான கலை இலக்கியச் சாதனை விருது” (2011)

  • 4.தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூல்களுக்கான பரிசு வழங்கும் திட்டத்தின் கீழ் 2010 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டு சிறந்த நூல்களுக்கான போட்டியில் கலந்து கொண்ட நூல்களுள் கணினியியல் பிரிவில் சிறந்த நூலுக்கான பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் (2012).

  • 5.போடிநாயக்கனூர் திருமதி ஆவடையம்மாள் நினைவு அறக்கட்டளை வழங்கிய கணினி மற்றும் இணையத் தமிழ்ப் பணிக்கான ரூ 5000 பரிசுத் தொகையுடனான சாதனையாளர் விருது. (2014)

வடிவமைத்துப் பராமரிக்கும் இணையதளங்கள்:

  • 1.முத்துக்கமலம் தமிழ் இணைய இதழ்  www.muthukamalam.com       

  • 2.Theni Times – Theni District Information   (www.thenitimes.com)                                                                           

கணினி மற்றும் இலக்கிய அமைப்புகளில் பொறுப்புகள்:

  • 1. செயலாளர் – சங்கம் தமிழ் அறக்கட்டளை, சென்னை.

  • 2. செயற்குழு உறுப்பினர் – கணித்தமிழ்ச் சங்கம், மதுரைக்கிளை.