(நிழற்படம் இல்லை)

திரு.வி.க:

பெயர்:   திரு.வி.கலியாணசுந்தரனார் (1883 - 1953)
பிறந்தஇடம்:   துள்ளம், செங்கல்பட்டு

 

படைப்பாற்றல்:  மேடைப்பேச்சு, கட்டுரை

படைப்புக்கள்:

  • கதிரவேற்பிள்ளை அவர்கள் சரித்திரம்
  • பெண்ணின் பெருமை
  • மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்
  • இந்தியாவும் விடுதலையும்
  • தமிழ்த் தென்றல்
  • சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து
  • முருகன் அல்லது அழகு
  • நாயன்மார் வரலாறு
  • இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம்
  • பொதுமை வேட்டல்
  • சைவத் திறவு
  • வாழ்க்கைக் குறிப்புக்கள் (இரண்டு தொகுதிகள்)

இவரைப்பற்றி:

  • தேசபக்தன், நவசக்தி ஆகிய இதழ்களின் ஆசிரியராகப் பணிபுரிந்தவர். அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளில் ஈடுபாடுகொண்டு பல நூல்கள் எழுதியவர். தமிழ் முனிவர், தமிழ் தென்றல் என்றெல்லாம் போற்றப்பட்டவர். இவர் ஒரு சிறந்த மேடைச்பேச்சாளர். தேசபக்தன், திராவிடன், நவசக்தி போன்ற பத்திரிகைகளில் ஆசிரியராக இருந்தவர். 'திரு வி.க அவர்கள் கூனிக்கிடந்த தமிழர் விழிக்க வந்த முத்தமிழ் தேனருவி' என்று பாவேந்தர் பாரதிதாசனால் சிறப்பிக்கப்பட்டவர்.