வள்ளியப்பா:

பெயர்:  அ.வள்ளியப்பா
பிறந்த ஊர்:  இராயவரம்
(1922)

படைப்பாற்றல்: கவிதை, குழந்தைப் பாடல்கள்

படைப்புகள்:

சிறுவர் பாடல்கள்:

  • மலரும் உள்ளம் - 1944
  • பாலர் பாடல்கள்
  • மல்லிகை
  • சிட்டுக்குருவி

சிறுவர் கதைகள்:

  • பாட்டுக்குப் போட்டி
  • நல்ல நண்பர்கள்

விருதுகள்:

  • நல்ல நண்பர்கள் - தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசு பெற்றது.
  • குழந்தைக் கவிஞர் பட்டம் - தமிழ்வாணன்
  • தமிழ்ப் பேரவைச் செம்மல் - மதுரைப் பல்கலைக் கழகம் - 1982

இவர்பற்றி:

  • இவர் குழந்தைக் கவிஞர் வள்ளியப்பா என்று சிறப்பாக அழைக்கப்பட்டார். பாலர் மலர், டமாரம், சங்கு என்கின்ற இதழ்களுக்கு ஆசிரியராக விளங்கினார். பிற்காலத்தில் குழந்தை எழுத்தாளர்களும், குழந்தை எழுத்தாளர் சங்கமும் உருவாக இவரே கால்கோலாக விளங்கினார்.