விஜயலட்சுமி மாசிலாமணி:


பெயர்: விஜயலட்சுமி மாசிலாமணி
புனைபெயர்: விஜிமா
வசிப்பிடம்: சென்னை

படைப்புக்கள்:

கட்டுரைத் தொகுப்புகள்:

  • வளைகுடாப் போரில் நான் - 1997
  • மூக்குத்திப் பூக்கள் - 2004

விருதுகள்:

  • வளைகுடாப் போரில் நான் - சிறந்த நூலுக்கான விருது - 1997

இவர் பற்றி:

  • தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் அரசு அலுவலராக 1976 - 1988 வரை பணிபுரிந்தவர். பின்னர் (1988 - 1989) லிபியாவில் இந்தியப் பன்னாட்டுப் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றினார். இவரது எழுத்துப் பணி 1989 களில் ஆரம்பமானது. கிட்டத்தட்ட 13 நூல்கள் வரை எழுதியுள்ளார். மனிதகுல மாமணி, மனிதநேயப்பண்பாளர், பாரதி பணிச்செல்வர் போன்ற விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். 'எப்போதும் திருந்தலாம்' என்ற எயிட்ஸ் விழிப்புணர்வு தொடர்பான இவரது சிறுகதை 1997 இல் அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பானது. 11.12.2003 இல் அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்களின் நலனுக்காக பள்ளிக்கரணை என்னும் இடத்தில் இலவச மருத்துவ முகாமையும் நடத்தினார். சமுதாயத்தின் மீது அதீத அக்கறைகொண்ட இவர் பல விழிப்புணர்வு முகாம்களையும், சமூகநலப்பணிகளையும் புரிந்துவருகிறார்.


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamilauthors (தமிழ் ஆதர்ஸ்).