|
|
விமலாரமணி:
பெயர்: திருமதி விமலாரமணி
தொடர்புகளுக்கு:
முகவரி:
“Aravinda Apartments”
156 – B, Kalidas Road
Ramnagar, Coimbatore – 614 009
Tel: 0422 – 2232052
Mobile: 98431 – 32052
E-mail:
vimalaramanis@yahoo.com |
|
படைப்பாற்றல்:
சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம்
படைப்புக்கள்:
- உழைப்பால் உயர்ந்த உத்தமர் -
வாழ்க்கை வரலாற்று நூல்
- வானப்பூ
- அடிவானத்துக்கு அப்பால்
- யாழிசை
- மாணிக்கப் புதையல்
- பாரிஜாதம்
- அன்புக் காணிக்கை
- கல்யாணி சிரித்தாள்
- விழிமலர்
- தாழம்பூ
- ஒளி நிலா
- புதிய சகாப்தங்கள்
- ஒரு பறவை கூண்டை விட்டு
வெளியேறுகிறது
- காதல் நீலாம்பரி
- கன்னத்தில் முத்தமிட்டால்
- குமரிப் பெண்ணே குயிலாளே
- மெல்ல வீசும் வசந்தங்கள்
- பனி மலைகள்
- ராத்திரிகள் வந்து விட்டால்
- அக்கரையில் ஓர் அந்நியப்பறவை
- உன் பார்வை பிருந்தாவனம்
- காதல் வரம்
- லாஸ்ட் வானிங்
- ஊனங்கள்
- மன்னிக்கப்படாத பாவிகள்
- மண் பொம்மைகள்
- ஜாதி புதிது
- நீ ஒரு காதல் சங்கீதம்
- பந்தயக் குதிரை
- ஒரு காதல் கணக்கு
- வஸந்த விழா
விருதுகள்,
பரிசுகள்:
- குங்குமம் - டாலர் பரிசு –
முதல்பரிசு – 1978
- தினமணிகதிர் - சிறுகதைப் போட்டி
– முதல்பரிசு – 1977
- கலைமகள் - குறுநாவல் போட்டி –
முதல்பரிசு – 1979
- சுஜாதா – குறநாவல் போட்டி –
முதல்பரிசு மற்றும் பல
- 'சமூக நலத்திலகம்' என்னும் விருது
– பம்பாய்த் தமிழ்சங்கம்
- வி.ஜி.பி விருது – சென்னை
வி.ஜி.பி நிறுவனம்
- எழுத்துச் சுடர் என்னும் விருது
– சென்னை உரத்த சிந்தனை அமைப்பு
- மனிதநேயமாண்பாளர் - கோவை வசந்த
வாசல்
- சாதனைப் பெண்மணி என்னும் விருது
– கோவை ஆரிய வைஸ்யா சங்கம்
- அவுட்ஸ் ஸ்டாண்டிங்க் நாவலிஸ்ட்
- கோவை சுழற்சங்கம் - 1993
என்பன உள்ளிட மேலும் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
இவர் பற்றி:
-
இவர் ஒரு பி.ஏ பட்டதாரி. இதுவரை
1000 க்கும் மேற்பட்ட
சிறுகதைகள், 600 நாவல்கள்
எழுதியுள்ளார். குங்குமம், கல்கி, குமுதம், விகடன், மாலைமதி,
வசந்தம், ராணிமுத்து, கலைமகள், தினமலர், ஓம்சக்தி, பெண்மணி, வாசுகி,
மங்கை, பாக்கெட் நாவல், மங்கையர் மலர், சாவி, அமுதசுரபி
போன்றவற்றில் இவரது படைப்புக்கள் வெளிவந்துள்ளன. 'நவரத்தினா'
என்னும் இவரது நாடகக் குழு மூலமாக 10
மேடை நாடகங்களை 100 முறை
அரங்கேற்றியுள்ளார். எண்ணற்ற வானொலி நாடகங்களையும் வழங்கியுள்ளார்.
இவர் தொலைக்காட்சிக்காக 'கல்யாணப்பந்தல்', 'உறவை தேடிய பறவை'
என்னும் தொடர்களையும் எழுதியுள்ளார். இந்திய தொலைக்காட்சிகள்
பலவற்றிலும் இவரது கருத்தரங்குகள் மற்றும் பேட்டிகள்
ஒலிபரப்பாகியுள்ளன. இவரது நாவல்களில் ஒன்று 'கண்ணே கனியமுதே'
(1988) என்ற பெயரில்
திரைப்படமாக வெளிவந்ததுள்ளது. படை 'பளிங்கு மண்டபம்', 'நதி இல்லாத
ஓடம்' ஆகிய நாவல்கள் திரைப்படங்களாக எடுப்பதற்கு
தேர்வுசெய்யப்பட்டுள்ளன. 'மலர் மல்லிகை என்ற பெண்கள் பத்திரிகையில்
சில மாதங்கள் ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். கோவையில் நடந்த
செம்மொழி மாநாட்டில் கலந்து கொண்டு 25.06.2010
அன்று மாசாத்தியார் அரங்கில் பெண்ணியம் பற்றி கட்டுரை வாசித்தளித்த
பெருமைக்கு உரியவர்.
|
|
|
|