விந்தன்:

பெயர்: வோதாசலம் விந்தன்
பிறந்த இடம்: செங்கல்பட்டு
(22.09.1916 – 30.06.1975)

படைப்பாற்றல்: சிறுகதை, நாவல், ஓவியம்

படைப்புக்களில் சில:

சிறுகதைத் தொகுப்புகள்:

  • முல்லைக் கொடியாள் - 1946

நாவல்கள்:

  • பாலும் பாவையும் - 1950 (இந்நாவல் 9 பதிப்புக்கள் வெளிவந்தன)
  • பசி கோவிந்தம்

விருதுகள்:

  • தமிழ் வளர்ச்சிக் கழக விருது - முல்லைக் கொடியாள் - 1946

இவர் பற்றி:

  • சமூக அவலங்களைச் சாடி எழுதியவர்களில் சென்ற நூற்றாண்டின் முதன்மையாளராக இவரைக் குறிப்பிடலாம். இவர் கல்கி இதழின் துணையாசிரியராகப் பணிபுரிந்தவர். மனிதன் என்ற பத்திரிகை ஒன்றையும் சிறிது காலம்; நடத்திவந்தார். சிறுகதை எழுதுவதில் மன்னன் என்று கூறுமளவிற்கு சிறந்து விளங்கினார். ஒரு காலத்தில் பிராமண எழுத்தாளர்களால் பிராமண சூழலில் மட்டுமே வந்துகொண்டிருந்த தமிழ்ச் சிறுகதைகளுக்கு வேறு உருவம் கொடுத்தவர் விந்தன். இவர் உழைப்பாளி வர்க்கத்தின் மன உளைச்சல்களை கதையாக்கியவர். இவர் வாழப் பிறந்தவள், அன்பு, கூண்டுக்கிளி, மணமாலை, பார்த்திபன் கனவு போன்ற திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதினார். இவர் அந்தக் காலத்தில் எழுதிய 'மயக்கும் மாலை பொழுதே நீபோ போ...' என்ற பாடல் இப்போதும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளது.