|
நிழற்படம் இல்லை
|
அறிவானந்தன்.மெ: (1938-2000)
|
|
படைப்பாற்றல்:
சிறுகதை, நாவல், குறுநாவல், நாடகம், நடிப்பு
படைப்புக்கள்:
நாவல்கள்:
- மல்லிகா – 1957
- நெஞ்சைத் தொடாதே – 1965
- சங்கமம்
இவர்பற்றி:
- இவரது மணி மண்டபம் என்ற உருவகக்
கதை மலேசிய எழுத்துலகிற்கு புதுமுயற்சி.இவர் எழுதிய 'கூட்டுக்கு
வெளியே' என்ற இலக்கிய நாடகம் இவருக்கு பெரும் புகழை ஈட்டித்தந்தது.
மலேசிய வானொலிக்கு 100 க்கும்
மேற்பட்ட நாடகங்கள், மர்மத் தொடர் நாடகங்களை எழுதியுள்ளார்.
வாழ்க்கைப் புயல், மர்மவலை, சொக்கத்தீவு, பைரவன் தீவு போன்ற மர்மத்
தொடர் நாடகங்கள் குறிப்பிடத்தக்கன. மலேசியத் தொலைக்காட்சிக்காக 'இன்ஸ்பெக்டர்
சேகர்', 'இணைந்த கரங்கள்', 'குறள் வழி' போன்ற நாடகங்களை எழுதியதோடு,
நடித்தும் இருக்கிறார். இவரது 'ஒரு இன்ஸ்பெக்டர் வந்தார்' என்ற
புதுமை நாடகம் மலேசிய நாடக வரலாற்றில் ஒரு புரட்சியையே
ஏற்படுத்தியது. புதுடில்லியில் 1979
இல் நடைபெற்ற ஆஃப்ரோ-ஆசிய எழுத்தாளர்
கருத்தரங்கில் மலேசியப் பிரதிநிதியாகக் கலந்துகொண்டார். யாகபூமி –
வரலாற்று நாவல் ஒன்றையும் 'மலேசிய நண்பன்' ஞாயிறு பதிப்பிற்காக
50 வாரங்கள் தொடர்ந்து
எழுதினார்.
|
|
 |

|