ஜெயந்திசங்கர்:

பெயர்: ஜெயந்தி சங்கர் 
பிறந்த இடம்: மதுரை 
வதிவிடம்: சிங்கப்பூர் 
தொடர்புகளுக்கு:
E.mail: jeyanthisankar@gmail.com

படைப்பாற்றல்: சிறுகதை, நாவல், குறுநாவல், கட்டுரை, சிறுவர் கதைகள், மொழிபெயர்ப்புகள், வாழ்க்கை வரலாறு.
 
வெளியீடுகள்:
 
சிறுகதை தொகுப்புகள்:
  • நாலேகால் டாலர் - 2005
  • பின் சீட் - 2006
  • நியாயங்கள் பொதுவானது - 2006
  • மனுஷி - 2007
  • திரைகடலோடி - 2008
  • தூரத்தே  தெரியும் வான்விளிம்பு - 2010

நாவல்கள்:

  • வாழ்ந்து பார்க்கலாம் வா - 2006
  • நெய்தல் - 2007
  • மனப்பிரிகை - 2008
  • . குவியம் - 2009

சிறுவர் இலக்கியம்:

  •  மீன் குளம் (சிறார் சீனக்கதைகள் - ஆங்கிலம் வழி - 2007

மொழிபெயர்ப்பு  தொகுப்புகள்:

  • மிதந்திடும் சுயபிரதிமைகள் - சீனக் கவிதைகள்
  • சூரியனுக்கு சுப்ரபாதம் - 2007

 வாழ்க்கை வரலாறு:

  • இசையும் வாழ்க்கையும் - 2007

குறுநாவல்:

  • முடிவிலும் ஒன்று தொடரலாம் - 2005

கட்டுரைத் தொகுப்புகள்:

  • ஏழாம் சுவை - 2005

  •  பெருஞ்சுவருக்குப் பின்னே  - 2006

  •  சிங்கப்பூர் வாங்க - 2006

  • ச்சிங் மிங் - 2009

  • கனவிலே ஒரு சிங்கம் - 2010

விருதுகள்:

  •  'தெளிவு', 'கீரை' சிறுகதைகள் ஆறுதல் பரிசுகள் பெற்று சிங்கை வானொலியில் ஏற்ற இறக்கங்களுடன் வாசிக்கப் பட்டிருக்கின்றன - 1990
  • சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் நடந்திய பாவேந்தர் பாரதிதாசன் கட்டுரைப் போட்டி -  இரண்டாம் பரிசு - 1998
  • சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் நடந்திய சிலப்பதிகாரப் போட்டி - ஆறுதல் பரிசு - 2000
  • சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் நடத்திய சிறுகதைப் போட்டி -  சிறுகதை 'நொண்டி' (நுடம்) இரண்டாம் பரிசு - 2001
  • சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கம் உலகத்தமிழாசிரியர் மாநாட்டை ஒட்டி நடத்திய 'குறுநாவல்' போட்டியில் 'குயவன்' என்ற குறுநாவல் -  முதல் (தங்கப்) பரிசு - 2001
  • சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் - 'முத்தமிழ் விழா' மற்றும்தமிழ் முரசு ஏற்பாட்டில்வளர் தமிழ் இயக்கத்தின் ஆதரவில் நடந்த அமரர் சே.வெ. சண்முகம் நினைவு சிறுகதைப் போட்டி
    -
     'பொம்மை' சிறுகதை  - இரண்டாம் பரிசு - 2004
  • அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப்போட்டியில் 'சேவை' என்ற சிறுகதை தேர்ந்தெடுக்கப்பட்டது
    - 2005
  • சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக ஏற்பாட்டில் வளர் தமிழ் இயக்கத்தின் ஆதரவில் நடந்த அமரர் சே.வெ. சண்முகம் நினைவுச் சிறுகதைப் போட்டியில் (முத்தமிழ் விழா ) 'மழலைச்சொல் கேளாதவர்' சிறுகதை ஊக்கப்பரிசு - 2005
  • தேசியகலைகள் மன்றம் மற்றும் சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்க் இணைந்து நடத்திய தங்க முனைப்பேனா விருது கௌரவக் குறிப்பு - ‘வேண்டியது வேறில்லை' (குறுநாவல்) - நான்காமிடம் - - 2005
  • பிரபல எழுத்தாளர் கோவை ஞானி அவர்கள் தலைமையில் திருமதி ராஜேஸ்வரி அவர்களின் ஆதரவில் 'தமிழ் நேயம்' சார்பில் நடைபெற்ற பெண் எழுத்தாளர்களுக்கான சிறுகதைப் போட்டி - 'கடைசிக் கடிதம் சிறுகதை -  முதல் தகுதி - அமைப்பின் எட்டாவது தொகுதியான 'புதிய காளி'யில் பிரசுரம் - 2005
  • 'தமிழ் நேயம்' அமைப்பின் பெண் எழுத்தாளர்களுக்கான சிறுகதைப் போட்டி -  'சொல்லாத சொல்' என்ற சிறுகதை - முதல் தகுதி. 'கனலும் எரிமலை' என்ற ஒன்பதாவது தொகுதியில் பிரசுரம் - 2006
  • 'தமிழ் நேயம்' அமைப்பின் பத்தாவது தொகுதியான 'சுடும் நிலவு'ல் 'வீடு' சிறுகதை தேர்வு/பிரசுரம் - 2007
  •  'நியாயங்கள் பொதுவானவை - சிறுகதைத் தொகுப்பு - திருப்பூர் அரிமா சங்கத்தினர் ஏற்பாடு செய்த 'அரிமா சக்தி விருது 2006'ல் - சிறப்புப் பரிசு பெற்றது - 2006
  • சிங்கப்பூர் இலக்கிய விருது - 2008க்கு இவரின் சிறுகதைத் தொகுப்பான 'பின் சீட்' தேர்வானது - 2008
  • 2009 கல்கி 28-12-08ல் பிரசுரமான சிறுகதை 'புதிய அவதாரம்' இலக்கியச் சிந்தனை அமைப்பினால் 2008 டிஸம்பர் மாதத்தின் சிறந்த சிறுகதையாகத் தேர்வாகியுள்ளது.
  • மிதந்திடும் சுயபிரதிமைகள் நூலுக்கு  - நல்லி - திசையெட்டும் இலக்கிய விருது -  2009
  • 'மனப்பிரிகை' நாவலுக்கு - அரிமா சக்தி விருது - 2008
  • திரைகடலோடி சிறுகதைத் தொகுப்பு சிங்கப்பர் இலக்கிய விருதுக்குத் தேர்வு - 2010

இவர் பற்றி:

  • சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்தின் வருடாந்திர மூன்று மாத 'வாசிப்போம் சிங்கப்பூர்' இயக்கத்தில் related reading பிரிவில் இவரது  'நாலேகால் டாலர்' சிறுகதைத் தொகுப்பு வாசகர்களுக்குப் பரிந்துரைக்கப்பட்டது (2006).