|
 |
|
முத்துலிங்கம்.அ:
பெயர்: அப்பாத்துரை முத்துலிங்கம்
பிறப்பிடம்: கொக்குவில், யாழ்ப்பாணம்.
வசிப்பிடம்: கனடா
தொடர்புகளுக்கு:
E.mail:
amuttu@gmail.com |
|
படைப்பாற்றல்: சிறுகதை, நாவல், கட்டுரை
படைப்புகள்:
சிறுகதைத் தொகுதிகள்:
- அக்கா – 1964
- திகடசக்கரம் - 1995
- வம்சவிருத்தி - 1996
- வடக்குவீதி – 1998
- மகாராஜாவின் ரயில் வண்டி –
2001
- அ. முத்துலிங்கம் கதைகள் - (சிறுகதைகளின்
முழுத்தொகுப்பு - 2004)
- முத்துலிங்கம் சிறுகதைகள் - தேர்ந்தெடுக்கப்பட்ட
சிறுகதைகளின் இறுவெட்டு - 2009
நாவல்:
- உண்மை கலந்த நாட்குறிப்புகள்
(2008)
கட்டுரைத் தொகுப்புகள்:
- அங்க இப்ப என்ன நேரம்?
- வியத்தலும் இலமே - 2006
- கடிகாரம் அமைதியாக
எண்ணிக்கொண்டிருக்கிறது - 2006
- பூமியின் பாதி வயது -
2007
மொழிபெயர்ப்புத்தொகுப்பு:
- தற்கால வட அமெரிக்க கதைகள்
விருதுகள்:
- அக்கா – சிறுகதை – தினகரன்
நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல்பரிசு
- கல்கி சிறுகதைப் போட்டி பரிசு
- ஜோதி விநாயகம் பரிசு –
1997
- திகடசக்கரம் - லில்லி
தேவசிகாமணிப் பரிசு – 1995
- வம்சவிருத்தி – சிறுகதைத் தொகுப்பு
– தமிழ்நாடு அரசு – முதல்பரிசு – 1996
- வம்சவிருத்தி – சிறுகதைத் தொகுப்பு
– இந்திய ஸ்டேட் வங்கி –
முதல்பரிசு.
- வடக்கு வீதி – சிறுகதைத் தொகுப்பு
- இலங்கை சாகித்தியப் பரிசு – 1999
- கனடா தமிழர் தகவல் - நாற்பதாண்டு
தமிழ் இலக்கியச் சாதனை விருது - 2006
இவர்பற்றி:
-
எழுத்தாளர் அ.முத்துலிங்கம் கொழும்பு
பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப் பட்டதாரி. பணி நிமித்தமாக
தென்னாபிரிக்கா, சோமாலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் முக்கிய
பதவிகளில் பணிபுரிந்துள்ளார். இவருடைய கதைகளின் களம், பொருள், கரு,
கதைசொல்லும் பாங்கு தமிழ் எழுத்துலகிற்கு புதியவை. தமிழ்ச்
சிறுகதைப் பாதையை புதிய தளத்திற்கு இட்டுச் செல்வன இவரது கதைகள்.
இவருடைய 'அமெரிக்கக்காரி' சிறுகதைத் தொகுப்பு விரைவில் வெளிவர
இருக்கிறது.
|
|
 |
|
|