|
 |
|
அப்துல்ஸமது.அ.ஸ:
பெயர்: அ.ஸ.அப்துல் ஸமது
புனைபெயர்: அன்பு இறைதாசன்
பிறப்பிடம்: அக்கரைப்பற்று, கிழக்கிலங்கை (1929) |
|
படைப்பாற்றல்: சிறுகதை, நாவல், கவிதை
படைப்புகள்:சிறுகதைத்
தொகுப்புகள்:
- எனக்கு வயது பதின்மூன்று –
1977
நாவல்கள்:
- பனிமலர்
- கனவுக்பூக்கள்
- தர்மங்களாகும் தவறுகள்
கவிதைத் தொகுப்பு
கட்டுரைத் தொகுப்புக்கள்:
- இசுலாமிய இலக்கியம்
- நவீன தமிழ் இலக்கியம்
- சீறா இன்பம் - 1957
- இலக்கியப் பொய்கை 4, 5,
6, 7, 8 ஆம் வகுப்புப் பாடநூல்கள்
- சுலைமான் பல்கீஸ் - 1959
விருதுகள்:
- சாகித்திய மண்டலப் பரிசு - எனக்கு
வயது பதிமூன்று என்ற சிறுகதைத் தொகுப்பிற்கு – 1977
- வீரகேசரி மட்டக்களப்பு பிரதேச
நாவல் போட்டி - பனிமலர் - முதற்பரிசு – 1982
இவர் பற்றி:
- கிழக்கிலங்கையின் மூத்த
படைப்பாளிகளில் முக்கியமானவர். மாணவப் பருவத்திலிருந்தே
எழுதத் தொடங்கியவர். இவரது முதல்சிறுகதை 'நூர்ஜஹான்' 1950
இல் தினகரனில் வெளியானது. இவர் இலங்கை முற்போக்கு எழுத்தாளர்
சங்கம், மட்டக்களப்பு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்பவற்றின்
தலைவராக செயல்ப்பட்டவர். அமரராகிவிட்டார்.
இலங்கை முற்போக்கு சங்கத்தில்
மார்க்சியத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் பலர் இருந்தனர்.
வ.அ.இராசரத்தினம், அ.ச.அப்துல்ஸமது, மருதூர் கொத்தன் போன்றவர்கள்
அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். இவர் 1962
இல் ஈழத்து முஸ்லிம் கவிஞர்கள் 57
பேரின் கவிதைகளைத் தொகுத்து 'முற்றத்து மல்லிகை' என்னும் நூலாக
வெளியிட்டார். இவர் அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலையில்
விரிவுரையாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். கிழக்கு மாகாண இஸ்லாமிய
மக்களின் வாழ்வினை நுட்பமாகவும் கலாரீதியாகவும் யதார்த்தமாகவும்
படைப்பிலக்கியத்தில் வனப்புறச் சித்தரித்தவராக விமர்சகர்கள் அப்துல்
ஸமதுவை மதிப்பிடுகின்றனர். இவர் உருவகக் கதைகள் எழுதுவதிலும்
வல்லவர். நல்ல மேடைப் பேச்சாளர். வானொலி நிகழ்ச்சியாளர். இவர்
1991
இல் முஸ்லிம் கலாச்சார இராஜாங்க
அமைச்சினால் கௌரவிக்கப்பட்டார்.
|
|
 |
|
|