|
நிழற்படம் இல்லை |
முருகானந்தன்.அ.செ:
பெயர்: அ.செ.முருகானந்தன்
புனைபெயர்கள்: யாழ்பாடி, யாழ்தேவி, பீஷமன், முருகு, நீலாம்பரி,
காங்கேயன், கதிரவன், மயிப்புறவம், இளவேனில், பூராடன், சோபனா, மேகலை,
தனுசு, கத்தரிக்குறளி, போர்வீரன், வள்ளி காந்தன் |
|
படைப்பாற்றல்:
சிறுகதை, நாவல், நாடகம், குறுநாவல், விமர்சனம்,
கட்டுரை, மொழிபெயர்ப்பு, வரலாறு
படைப்புக்கள்:
சிறுகதைத் தொகுப்பு:
குறுநாவல்:
விருதுகள்:
- சிந்தனைச் செல்வர் - விருது – தெல்லிப்பளை கலைப் பெருமன்றம்
- 1973
இவர் பற்றி:
- பாடசாலை மாணவனாக இருந்தபோதே
(1921) எழுதத் தொடங்கியவர்
அ.மு.செ. 1938 இல் 'ஈழகேசரி' இதழில் 'கல்வி அனுபந்தம்' என்ற
புதுப்பகுதி தொடங்கப்பட்டது. அப்பகுதியில் கவனிப்புக்குரிய முறையில்
எழுதி வந்தவர் இவர். இவர் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின்
மாணவனாவார். இவர் 1941 இவர் 'ஈழகேசரி' வார இதழ் ஆசிரியர் குழுவில்
இணைந்து பணியாற்றினார். காப்பிரி, பரிசு, மனிதமாடு, வண்டிற்சவாரி
என்பன இவர் இக்காலப்பகுதியில் எழுதிய சிறுகதைகள். 1940
களிலேயே
தேசிய, அரசியல், சமுதாயப் பிரச்சினைகளைப் பற்றி சிந்தித்து
கேள்விகள் கேட்டு சமூகப் பிரக்ஞையோடு கதைகளை படைத்தவர் இவர்.
1943 இல் எழுத்தாளரான வரதருடன் இணைந்து மறமலர்ச்சிச் சங்கமும்,
மறுமலர்;ச்சி பத்திரிகையும் தோன்ற காரணமாக இருந்தார். ஈழத்தின்
இலக்கிய வளர்ச்சியில் மறுமலர்ச்சிச் சங்கத்தின் பணி அளப்பரியது.
பல புதிய எழுத்தாளர்கள் தோன்ற காரணமாக அமைந்தது.
தொடர்ந்து எரிமலை, சுதந்திரன், வீரகேசரி ஆகிய இதழ்களிலும்
பணியாற்றினார். பின்னர் யாழ்ப்பாணத்தில் 'ஈழநாடு' இதழிலும்
பணியாற்றினார். எரிமலை பத்திரிகையை இவரே நடத்திவந்தார். வானொலி
நாடகப் போட்டியில் பங்குகொண்டு தனது நாடகப் புலமையையும்
வெளிப்படுத்தியுள்ளார்.
|
|
 |

|