படைப்பிலக்கியத் துறையில் இருந்து
திரைப்படத்துறை கொள்ளையடித்துச் சென்றவர்களில் ஒருவர் பாலுமகேந்திரா.
மாணவப் பருவத்திலேயே தமிழ், ஆங்கிலப் படைப்பிலக்கியப் புத்தகம்
படிப்பதில் வெறித்தனம் கொண்டவர். தேனருவி என்ற சஞ்சிகையின்
(1964) ஆசிரியர் குழுவில் ஒருவராக
விளங்கினார். நிறைய இலக்கியக் கனவுகளுடன் 'தேனருவியில்' இவரது முதல்
சிறுகதை 'வடிகால்' வெளியானது. இவர் பூனா திரைப்படக் கல்லூரியன்
ஒளிப்பதிவுப் பட்டதாரி. 1969
இல் இந்தக் கல்லூரியின் முதல் மாணவனாகத் தேர்ச்சியடைந்து
தங்கப்பதக்கம் பெற்றார். 1973
இல் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றத் தொடங்கினார். 1976
இல் 'கோகிலா' திரைப்படத்தின்
இயக்குநர் ஆனார்.