தீபச்செல்வன்:

பெயர்: தீபச்செல்வன்
பிறந்த இடம்: இரத்தினபுரம், கிளிநொச்சி
(24.10.1983)
தொடர்புகளுக்கு:
மின்னஞ்சல்:
deebachelvan@gmail.com

படைப்பாற்றல்: கவிதை, சிறுகதை, பத்திஎழுத்து, ஓவியம், வீடியோ விவரணம், புகைப்படம், ஆவணப்படம், விமர்சனம்

படைப்புக்கள்:

கவிதைத் தொகுப்புகள்:
  • பதுங்கு குழியில் பிறந்த குழந்தை - 2008
  • பாழ் நகரத்தின் பொழுது - 2010

பிற படைப்புக்கள்:

  • ஈழம் மக்களின் கனவு - 2011
  • ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம் - 2009

இவர் பற்றி:

  • தீபச்செல்வன் எழுத்துத் துறையோடு மட்டும் நின்றுவிடாது ஓவியம். வீடியோ விவரணம், புகைப்படத்துறை, ஆவணப்படம், வானொலிப்பெட்டகம், ஊடகவியல், விமர்சனம் என்று பல்துறைகளிலும் கால்பதித்துள்ளார். போர், அரசியல், மாணவத்துவம், தனிமனித உணர்வுகள் தொடர்பான விடயங்கள் இவரது எழுத்துக்களில் பிரதிபலிக்கின்றன. யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழ்துறையில் சிறப்புப் பட்டம் பெற்றவர். தீபம் என்ற பெயரில் வலைப்பதிவு ஒன்றும் எழுதிவருகிறார். இவரது முதல் கவிதை 2005 ஆம் ஆண்டு சுடரொளிப் பத்திரிகையில் வெளியானதன் மூலம் எழுத்துலகிற்குள் தடம்பதித்தார்.


Copyright© 2009, Tamilauthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil authors (தமிழ் ஆதர்ஸ்).