நிழற்படம் இல்லை
இளங்கீரன்:

 
படைப்பாற்றல்: சிறுகதை, நாவல், நாடகம்

படைப்புகள்:

நாவல்கள்:

  • ஒரே அணைப்பு
  • மீண்டும் வந்தாள்
  • பைத்தியக்காரி
  • பொற்கூண்டு
  • கலா ராணி
  • மரணக் குழி
  • காதலன்
  • அழகு ரோஜா
  • வண்ணக் குமரி
  • காதல் உலகிலே
  • பட்டினித் தோட்டம்
  • நீதிபதி
  • எதிர்பார்த்த இரவு
  • மனிதனைப் பார்
  • புயல் அடங்குமா?
  • சொர்க்கம் எங்கே?
  • காலம் மாறுகிறது
  • மண்ணில் விளைந்தவர்கள்
  • அவளுக்கு ஒரு வேலை வேண்டும்
  • அன்னை அழைத்தாள் - முதலிய இவரது நாவல்கள் பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும்
    வெளிவந்தவை.

 

வெளிவந்த படைப்புகள்:

நாவல்கள்:

  • தென்றலும் புயலும் - 1955
  • நீதியே நீ கேள்! – 1959

கட்டுரைத் தொகுப்புகள்:

  • ஈழத்து முற்போக்கு இலக்கியமும் இயக்கமும் - 1994
  • தேசிய இலக்கியமும் மரபுப் போராட்டமும் - 1993
  • பேராசிரியர் கைலாசபதி நினைவுகளும் கருத்துக்களும் - 1992

விருதுகள்:

  • இலக்கிய வேந்தர் பட்டமும், விருதும் - இலங்கை முஸ்லிம் சமய கலாசார இராஜாங்க அமைச்சினால் வழங்கப்பட்டது – 1992
  • இந்து சமய. கலாசார இராஜாங்க அமைச்சினால் நடத்தப்பட்ட சாகித்திய விழாவில் இலக்கியச்செம்மல் எனும் பட்டமும், விருதும் வழங்கப்பட்டது – 1992

இவர் பற்றி:

  • ஈழத்து முஸ்லிம் எழுத்தாளர்களில் தனித்துவமானவர். ஐம்பதுகளில் ஈழத்துத் தமிழ் நாவலுக்குப் புதிய பரிணாமத்தைத் கொடுத்தவர். இருபதுக்கு மேற்பட்ட நாவல்களை எழுதியுள்ளார். மரகதம் என்ற இலக்கியச் சஞ்சிகையை 1961 இல் நடத்தி வந்தவர். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தோடு இணைந்து செயற்பட்டவர். இலங்கை வானொலி தேசிய சேவையில் இவர் எழுதிய பல நாடகங்கள் ஒலிபரப்புச்செய்யப்பட்டன. மனித புராணம், வாழப்பிறந்தவர்கள் என்பன இவரது புகழ்பூத்த தொடர்நாடகங்கள். இலங்கை கம்னியூஸ்ட் கட்சி சீன சார்பு, ரஷ்ய சார்பாக பிளவுபட்ட காலத்தில் க. கைலாசபதியுடன் இளங்கீரன், டானியல், என்.கே. ரகுநாதன், செ. கணேசலிங்கம் போன்ற எழுத்தாளர்களும் யாழ்ப்பாணக் கவிராயர் சுபத்திரன் போன்ற கவிஞர்களும் சீனச்சார்பு எடுத்தார்கள்.