படைப்பாற்றல்:
கவிதை, மெல்லிசைப்பாடல்கள்
விருதுகள், பரிசுகள்:
- யாழ் இளம் கவிஞர் கழகம் நடத்திய
கவிதைப் போட்டி - இரண்டாம் பரிசு
இவர்பற்றி:
இவர் பிரபல ஈழத்துக் கவிஞர்.
500 க்கும் மேற்பட்ட வானொலி மெல்லிசைப்
பாடல்களையும், நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகளையும் எழுதியுள்ளார்.
இலங்கையின் அனைத்துத் தமிழ்ப் பத்திரிகைகளிலும் இவரது கவிதைகள்
வெளிவந்துள்ளன. இவர் இலங்கை வானொலி, ரூபவாஹினி ஒளிபரப்புக்
கூட்டுத்தாபன நிகழ்ச்சிகள் மற்றும் பல ஈழத்துப் பாடகர்களுக்காகவும்
பல பாடல்களை இயற்றியவர். 1956
ஜூன் 8 இல் மட்டக்களப்பில்
நடைபெற்ற தனிச்சிங்களச் சட்டத்தை எதிர்க்கும் சத்தியாக்கிரகப்
போராட்டத்தில் ஈடுபட்ட போது இவர் தன் இரண்டு கண்களையும் இழந்தார்.
அதன்பின்பும் தனது இலக்கியப் பணியை அயராது தொடர்ந்தார்.
|