|
 |
நடராசா.எப்.எக்ஸ்.சி:
(கலாநிதி
எப்.எக்ஸ்.சி.நடராசா)
பெயர்: எப்.எக்ஸ்.சி.நடராசா
புனைபெயர்கள்: ஆடவல்லான், கூத்தபிரான், புலியூரான்
பிறந்த இடம்: காரைநகர், மட்டக்களப்பு (21.7.1911) |
|
படைப்புகள்:
- ஈழமுந் தமிழும்
- மொழிபெயர்ப்பு மரபு
- ஈழத்து நாடோடிப் பாடல்கள்
- ஈழத் தமிழ் நூல் வரலாறு
- ஜேர்மனியின் சுருக்க விளக்கம்
- காரைநகர் மான்மியம்
- சரசோதி மாலை
- போர்த்துக்கேயர் காலம்
- ஒல்லாந்தர் காலம்
- ஆங்கிலேயர் காலம்
- நன்னூல் காண்டிகை உரையும் நாவலர்
பெருமையும்
- நாவலர் வாழ்க்கைக் குறிப்புகள்
- திருகோணமலை தமிழறிஞர்
திரு.தி.த.கனகசூரியர்
பதிப்பித்த நூல்கள்:
- மட்டக்களப்பு மான்மியம்
- எண்ணெய்ச் சிந்து
- கண்ணகி வழக்குரை வரம்பெறு காதை
- மட்டக்களப்பு மக்களின் வாழ்வும்
வளமும்
விருதுகள்:
- மகாவித்துவான்
- கலாசூரி
- இலக்கியச் செம்மல்
இவர் பற்றி:
- இவர் இலங்கை வானொலியில் பல
கலந்துரையாடல்கள், பேச்சுக்கள் என்பவற்றில் கலந்துகொண்டுள்ளார். பல
புனைபெயர்களில் இவரது கட்டுரைகள் இலங்கையிலிருந்து வெளியாகும்
பல்வேறு பத்திரிகைகளிலும் வெளியாகியுள்ளன. கோலாலம்பூர், மதுரை ஆகிய
இடங்களில் நடைபெற்ற உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகளில்
கலந்துகொண்டுள்ளார். இவர் ஆசிரியராக, அதிபராக, ஆசிரியக் கல்லூரி
விரிவுரையாளராகப் பணிபுரிந்துள்ளார்.
|
|
 |

|