ஜோர்ஜ்சந்திரசேகரன்:

பெயர்: ஜோர்ஜ் சந்திரசேகரன் (1940 – 2008)
புனைபெயர்: சந்திரிகா
பிறந்த இடம்: கொழும்பு

படைப்பாற்றல்: நாவல், சிறுகதை, ஓவியம், நாடகம், கவிதை

படைப்புக்கள்:

சிறுகதைத் தொகுப்பு:

  • ஜோர்ஜ் சந்திரசேகரனின் சிறுகதைகள் - 1995

நாவல்கள்:

  • பொம்மலாட்டம்

மொழிபெயர்ப்பு:

  • அபத்த நாடகம் - (நத்தையும் ஆமையும் நாடகம்)

கட்டுரை நூல்கள்:

  • ஒரு சருகுக்குள்ளே கசியும் ஈரங்கள் - வாழ்க்கை அனுபவங்கள்

விருதுகள்:

  • ஜோர்ஜ் சந்திரசேகரனின் சிறுகதைகள் - இலங்கை சாகித்திய விருது - 1995

இவர் பற்றி:

  • 1960 களில் எழுத்துத் துறையில் அறிமுகமானவர். கொட்டாஞ்சேனை சென்.பெனடிக்ட் கல்லூரியில் பயின்றவர். 'சந்திரிகா' என்ற பெயரில் ஓவியங்களும் வரைந்துள்ளார். இலங்கை வானொலியில்'உலக நாடக மேதைகள்' என்ற தலைப்பில் இவர் வழங்கிய உரை மிகவும் பயனுள்ளதும், பலராலும் விதந்துரைக்கப்பட்டதுமாகும். கால் நூற்றாண்டு காலமாக இலங்கை வானொலியில் நாடகத் தயாரிப்பாளராகப் பணியாற்றியவர். 1968 – 1996 வரை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராக செயற்பட்டார். இவர் தனது 68 ஆவது வயதில் 2008 ஆம் ஆண்டு ஆனி மாதம் 6ஆம் திகதி கொழும்பில் காலமானார்.


Copyright© 2009, Tamilauthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamilauthors (தமிழ் ஆதர்ஸ்).