|
|
ரிஸ்னா.எச்.எப்:
பெயர்:
எச்.எப்.ரிஸ்னா
புனைபெயர்:
குறிஞ்சி
நிலா
தொடர்புகளுக்கு:
முகவரி:
21E,Sri
Dharmapala Road, Mount Lavinia, Srilanka.
தொலைபேசி
இல: 0094
77 5009222
மின்னஞ்சல்
;:
riznahalal@gmail.com |
|
படைப்பாற்றல்:
கவிதை, சிறுகதை,
விமர்சனம்
இவர்
பற்றி:
-
இவர்
ஹலால்தீன் -
நஸீஹா
தம்பதியினரின்
சிரேஷ்ட
புதல்வியாவார்.
தரம்
மூன்றில்
கல்வி
கற்கும்
போதே 'பூங்கா'
என்ற
சிறுவர்
சஞ்சிகையில்
இவரது
ஆக்கம்
வெளிவந்தது.
அத்துடன்
பாடசாலையில்
கல்வி
கற்கும்
மாணவப்
பருவத்தில்
மீலாத்
தின
போட்டிகள்,
தமிழ்தினப்
போட்டிகளில்
பங்குபற்றி
பல
தடவைகள்
முதலிடத்தைப்
பெற்றிருக்கிறார்.
இவரது
முதல்
கவிதை
2003
இல்
மெட்ரோ
நியூஸ்
பத்திரிகையில்
'காத்திருப்பு'
என்ற
தலைப்பில்
வெளிவந்தது.
அதனைத்
தொடர்ந்து
கவிதை
சிறுகதை,
விமர்சனங்களை
பத்திரிகைகளில்
எழுதிவருகிறார்.
பெண்ணியம்,
சமூகப்பிரச்சனைகள்,
மலையக
மக்களின்
அன்றாட
அல்லல்கள்
என்பவை
இவரது
பாடுபொருள்களாக
அமைகின்றன.
வீரகேசரி,
தினகரன்,
தினக்குரல்,
மித்திரன்,
மெட்ரோ
நியூஸ்,
சுடர்ஒளி,
நவமணி,
விடிவெள்ளி,
எங்கள்
தேசம்
போன்ற
இலங்கையின்
முன்னோடிப்
பத்திரிகைகளிலும்
ஓசை,
நிஷ்டை,
மரங்கொத்தி,
ஜீவநதி,
செங்கதிர்,
படிகள்,
நீங்களும்
எழுதலாம்,
வேகம்,
பேனா,
அல்லஜ்னா,
நிறைவு,
ஞானம்,
அல்ஹஸனாத்
மற்றும்
இந்திய
சஞ்சிகையான
இனிய
நந்தவனம்
மற்றும்
இணையத்தளங்களிலும்
இவரது
ஆக்கங்கள்
பதிவாகியுள்ளன.
தற்போது
BEST QUEEN
FOUNDATION
என்ற
அமைப்பின்
உப
தலைவராகவும்,
பூங்காவனம்
சஞ்சிகையின்
துணை
ஆசிரியராகவும்
சேவையாற்றி
வருகிறார்.
அத்தோடு
இலங்கை
முற்போக்கு
கலை
இலக்கியப்
பேரவை,
முஸ்லிம்
கலைஞர்
முன்னணி
என்ற
இலக்கிய
அமைப்புக்களிலும்
உறுப்பினராக
தனது
பணியை
வழங்கிவருகிறார்.
'இன்னும்
உன்
குரல்
கேட்கிறது'
என்னும்
கவிதைத்
தொகுதி
ஒன்றையும், 'கானல்
நீர்'
என்னும்
சிறுகதைத்
தொகுதி
ஒன்றையும்
விரைவில்
வெளியிட
இருக்கிறார்.
|
|
 |

|