இவரது அவர்களுக்கு வயது
வந்துவிட்டது என்ற நாவல் சிங்களத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்ட
முதல் இலங்கைத் தமிழ் நாவலாகும். சூரசம்ஹாரம் என்ற இவரது நாவல்
தமிழக ஆனந்தவிகடனில் 23
வாரங்கள் தொடராக பிரசுரிக்கப்பட்டது. 1997
இல் வீரகேசரி ஞாயிறு பதிப்பில் குமரக்குறள் என்னும் தலைப்பில்
31 வாரங்கள் திருக்குறளை
மையமாக வைத்து அன்றாட வாழ்வின் விழுமியங்களை சிறுகதைகளாக
வரைந்துகாட்டினார். கீதைக் கீற்றுக்கள் என்னும் தலைப்பில்
1998 இல் தினக்குரல் ஞாயிறு பதிப்பில்
47 வாரங்கள் தொடராக சிறுகதைகள்
எழுதினார்.