|
 |
|
டானியல்.கே:
பெயர்:கே. டானியல்
பிறந்த இடம்: ஆனைக்கோட்டை - (1929)
|
|
படைப்புகள்:
சிறுகதைகள்:
- அமரகாவியம்
- உறவும் நிழலும்
- வள்ளி
- மரணநிழல்
- அதலபாதாளம்
சிறுகதைத் தொகுப்புகள்:
- டானியலின் சிறுகதைகள்
- உலகங்கள் வெல்லப்படுகின்றன
நாவல்கள்:
- பஞ்சமர்
- கானல்
- அடிமைகள்
- தண்ணீர்
- கோவிந்தன்
- போராளிகள் காத்திருக்கின்றனர்
இவரைப்பற்றி:
-
ஈழத்தின்
முதற்மையான நாவலாசிரியர், தலித் இலக்கியப் பிதாமகர். சுதந்திரன்
நடாத்திய சிறுகதைப் போட்டியில் அமரகாவியம் எனும் பரிசுபெற்ற
கதைமூலம் எழுத்துலகில் புகுந்தவர். அடக்கியெடுக்கப்பட்ட மக்களையும்,
அவர்களது விடுதலை வேட்கையையும் கதைப்பொருளாகக் கொண்டவர்.
பொதுவுடமைக் கட்சியின் வடபிரதேசக் கிளையின் முழுநேர ஊழியராகப் பல
வருடங்கள் பணியாற்றியிருக்கிறார். 60 களின் நடுப்பகுதியில்
சர்வதேசரீதியாகப் பொதுவுடமை இயக்கத்தில் ஏற்பட்ட பிளவு இலங்கையிலும்
எதிரொலித்தது. இதன் காரணமாக சோவியத் சார்பு, சீனச்சார்பு என
இலங்கைப் பொதுவுடமை இயக்கத்திலும் பிளவு ஏற்பட்டது. டானியலும்
நா.சண்முகதாசன் தலைமையிலான சீனச்சார்பு கட்சியினை ஆதரித்து
அதன்பயனாக 1971 இல் சிறைவைக்கப்பட்டார்.
|
|
 |
|
|