கைலாசபதி.க:

பெயர்: கனகசபாபதி. கைலாசபதி
புனைபெயர்: ஜனமகன், உதயன். அம்பலத்தாடி, அபேதன்
பிறப்பிடம்: கோலாலம்பூர், மலேசியா
(1933)
இவரது தந்தை மலேசியாவிலே பணிபுரிந்தபோது இவர் அங்கு பிறந்தார்.

 

படைப்புகள்:
  • பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும் -1966
  • தமிழ் நாவல் இலக்கியம் -1968
  • Tamil Heroic Poetry, Oxford – 1968
  • ஓப்பியல் இலக்கியம் - 1969
  • அடியும் முடியும் - 1970
  • ஈழத்துத் தற்காலத் தமிழ் நூற்காட்சி – 1971
  • கவிதை நயம் (இ. முருகையனுடன் இணைந்து எழுதியது) – 1976
  • இலக்கியமும் திறனாய்வும் - 1976
  • நாற்பது நாடுகளில் நாற்பத்தி நான்கு நாட்கள் (பயணக் கட்டுரை)
  • மக்கள் சீனம் - காட்சியும் கருத்தும் (மனைவியுடன் இணைந்து எழுதினார்) – 1979
  • The Tamil Purist Movement - A Re - Evalution, Social Scientist, Vol:7:10, Tribandrum
  • நவீன இலக்கியத்தின் அடிப்படைகள் - 1980
  • திறனாய்வுப் பிரச்சனைகள் - 1980
  • பாரதி நூல்களும் பாடபேத ஆராய்ச்சியும் - 1980
  • இலக்கியச் சிந்தனைகள் - 1983
  • பாரதி ஆய்வுகள் - 1984
  • The Relation of Tamil and Western Literatures
  • ஈழத்து இலக்கிய முன்னோடிகள் - 1986
  • On Art and Literature – 1986
  • இரு மகாகவிகள் - 1987
  • Oh Bharathi – 1987
  • சர்வதேச அரசியல் நிகழ்வுகள் (1979 – 1982)
  • Tamil (mineo) (co - author A, Shanmugadas)

இவர்பற்றி:

  • இவல் 1957 முதல் 1961 வரை தினகரன் பத்திரிகையில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்தார். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப்பட்டம் பெற்றார். பின்னர் இங்கிலாந்து பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொணடு முனைவர் பட்டம் பெற்றார். இங்கு மேற்கொண்ட 'தமிழில் வீரநிலைப்பாடல்கள்' என்னும் தலைப்பிலான ஆய்வு மேல்நாட்டாருக்கு தமிழிலக்கியச் சிறப்பையும், தமிழ் இலக்கிய ஆய்வுகளில் அதிக ஈடுபாட்டையும் ஏற்படுத்தியது. 1974 இல் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தின் தலைவராகவும், பின் துணைவேந்தராகவும் 1977 வரை பணியாற்றினார். இவர் அமெரிக்காவில் உள்ள கார்னல் பல்கலைக் கழகத்திலும் வருகை பேராசிரியராகப் பணிபுரிந்த பெருமைக்கு உரியவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைத்துறைத் தலைவராகவும் பணிபுரிந்தவர். மௌனகுரு, சித்தரலேகா, அம்மன்கிளி முருகதாஸ், மனோன்மணி சண்முகதாஸ், நுஃமான் ஆகியோர் இவரது மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  இலங்கையில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அமைக்கப்பட்ட பொழுது அதன் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தார். பல தரமான படைப்புகள் இச்சங்கத்தின் வாயிலாக வெளிவந்தன. தமிழ் இலக்கிய ஆய்வுகளிலும். சுமூக ஆய்வுகளிலும் தம்மை இணைத்துக்கொண்டு பணிபுரிந்தார். தனது 49 ஆவது அகவையில் 1982 இல் இயற்கை எய்தினார். கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக தமிழ் உலகிற்கு இவர் செய்த பணி, அவரது தரமான ஆய்வுகள் வெளிவரவும், முற்போக்கு எண்ணம் கொண்டவர்கள் ஆய்வுத் துறையில் மதிக்கப்படவும் காரணகர்த்தாவாக அமைந்தது.