|
 |
|
நவம்.க:
பெயர்: க.நவம்
பிறந்த இடம்: பொலிகண்டி, வல்வெட்டித்துறை
வசிப்பிடம்: கனடா
தொடர்புகளுக்கு:
Tel: 416-299-8150
E.mail:
knavam27@hotmail.com
|
|
படைப்பாற்றல்: சிறுகதை, கட்டுரை,
நாடகம், திரைப்பட நடிகர்
படைப்புக்கள்:சிறுகதைத்
தொகுதிகள்:
- உள்ளும் புறமும் - 1983,
1991
கட்டுரைத் தொகுதிகள்:
- உண்மைகளின் மௌன ஊர்வலங்கள் -
1991
விருதுகள்:
- சிரித்திரன் பத்திரிகை
சிறுகதைப்போட்டி – மூன்றாம் பரிசு – 1965
- ஸ்ரீலங்கா சாகித்திய மண்டலம் - 'தாயுள்ளம்'
சிறுகதை இரண்டாம் பரிசு வெள்ளிப்பதக்கம் - 1965
- அம்பாறை மாவட்ட நாடகப் போட்டி –
முதலாம் இடம் - 'இவர்கள் பைத்தியங்கள்' நாடகம் - இவரே எழுதி,
தயாரித்து, நெறிப்படுத்தியது – 1973
- கல்வியமைச்சின் அகில இலங்கை நாடகப்
போட்டி – முதலிடத்துக்கான தங்கப் பதக்கம் - 'இந்தத் தேசத்துக்காக'
நாடகம் (இவரே எழுதி, தயாரித்து, நெறிப்படுத்தியது.) –1974
- கனடா தமிழர் தகவல் - கலை இலக்கிய
விருதும் தங்கப் பதக்கமும் - 2008
- ஸ்ரீலங்கா வர்த்தக, கப்பல் துறை
அமைச்சு மற்றும் கலாச்சார அமைச்சு என்பன இணைந்து நடத்திய அகில இலங்கை
ஆக்க இலக்கியப் போட்டி – 'உள்ளும் புறமும்' சிறுகதைத் தொகுதி –
முதற்பரிசு தங்கப்பதக்கமும், 5000 ரூபா ரொக்கப் பணமும் - 1983
இவர் பற்றி:
-
இவர் ஈழத்தின்
பிரபல எழுத்தாளர் தெணியானின் இளைய சகோதரர். கனடாவில் அங்கீகாரம் பெற்ற
மொழி பெயர்ப்பாளராகவும், தகைமைப்பேற்று உறுதுணையாளராகவும்
விளங்குகிறார். இவரது முதல் சிறுகதை 'விரதம்' தினபதி நாளிதழில் 1966 இல் வெளியாகியது. இவரது
ஆக்கங்கள் ஈழத்து தினபதி, சிரித்திரன், மல்லிகை, வீரகேசரி, தினகரன்,
வளர்மதி, ஊற்று ஆகியவற்றிலும், பிறநாட்டு சஞ்சிகைகள், நாளிதழ்களான
தாயகம், தமிழோசை, ஈழநாடு, செந்தாமரை, மஞ்சரி, உலகத்தமிழர், சுதந்திரன்,
முழக்கம், வைகறை, தேசியம், தமிழர் தகவல் ஆண்டு இதழ்கள், ஆசீர்வாதம்,
உலகத் தமிழோசை, விளம்பரம், தாய்வீடு, காலச்சுவடு, பதிவுகள்.கொம்,
எழில்நிலா.கொம் ஆகியவற்றிலும் வெளியாகியுள்ளன. நான்காவது பரிமாணம் -
கலை இலக்கிய மாத இதழின் ஆசிரியராகவும், வெளியீட்டாளராகவும்
விளங்கினார் (1991 – 1993). இவர்
இதுவரை 21 நாடகங்கள்
நடித்துள்ளார். நெறிப்படுத்தி மேடையேற்றிய நாடகங்கள் 9.
எழுதிய நாடகப் பிரதிகள் - 6.
|
|
 |
|
|