|
நிழற்படம் இல்லை |
சம்பந்தன்.க.தி:
பெயர்:க.தி.சம்பந்தன்
|
|
இவர் பற்றி:
- 1938 இல் 'தாராபாய்' என்ற
சிறுகதையை 'கலைமகள்' பத்திரிகையில் எழுதியதன் மூலம் எழுத்தாளராக
அறிமுகமானவர். ஈழத்துச் சிறுகதை முன்னோடிகளான மூவரில் ஒருவர். மற்ற
இருவரான சி. வைத்திலிங்கமும், 'இலங்கையர்கோனு'ம் உறவினர்கள்.
இவர்கள் இருவரினதும் நண்பராக சம்பந்தன் விளங்கினார். 1938
ஆம் ஆண்டிலிருந்து இவர் எழுதிய
சிறுகதைகள் மொத்தம் 20 ஆகும்.
அவை கலைமகள், கிராம ஊழியன், ஈழகேசரி, மறுமலர்ச்சி ஆகிய இதழ்களில்
வெளிவந்தன. பிற்காலத்தில் கதைகள் எழுதுவதை விட்டுவிட்டு கவிதைகள்
எழுத ஆரம்பித்தார். எழுத்தாளர் சம்பந்தன் தமிழ், வடமொழி
இலக்கியங்களில் ஆழ்ந்த பரிச்சயம் கொண்டவர். 1967
இல் செம்பியன் செல்வனும், செங்கையாழியானும் இணைந்து 'விவேகி –
சம்பந்தர் சிறுகதை மலர்' என்ற பெயரில் இவரது ஐந்து கதைகளை
தொகுப்பாக வெளியிட்டனர். இதைத் தவிர இவரது எந்தத் தொகுப்பும்
வெளியாகவில்லை.
|
|
 |

|