|
 |
|
முனைவர் சிவத்தம்பி.கா:
பெயர்:
கார்த்திகேசு. சிவத்தம்பி
பிறப்பிடம்: கரவெட்டி, யாழ்ப்பாணம் (1932)
தொடர்புகளுக்கு:
முகவரி:
ராம்சேட் கோட், வெள்ளவத்தை, கொழும்பு 06,
இலங்கை
தொலைபேசி இல: 0602150803
|
|
படைப்புகள் சில:
- தமிழ்ச் சிறுகதைகள் தோற்றமும்
வளர்ச்சியும் - 1966
- இலங்கைத் தமிழர் -யார், எவர்?
- யாழ்ப்பாணத்தின் புலமைத்துவ மரபு
- தமிழில் இலக்கியவரலாறு
- இலக்கணமும் சமூக உறவுகளும்
- மதமும் கவிதையும்
- தமிழ் கற்பித்தலில் உன்னதம்
- தமிழ்ப்பண்பாட்டில் சினிமா
- தனித்தமிழ் இயக்கத்தின் அரசியல்
பின்னணி
- ஈழத்தில் தமிழ் இலக்கியம்
- யாழ்ப்பாண சமூகத்தை விளங்கிக்
கொள்ளல்
- சுவாமி விபுலானந்தரின்
சிந்தனைநெறிகள்
- திராவிட இயக்கக் கருத்துநிலையின்
இன்றைய பொருத்தப்பாடு
- தமிழ் கற்பித்தல்
- தமிழ் நூற்பதிப்புப் பணியில் உ.வே
சா (பாட விமர்சனவியல் நோக்கு)
- தமிழின் கவிதையியல்
- தொல்காப்பியமும் கவிதையும்
- உலகத் தமிழிலக்கிய வரலாறு (கி.பி.
1851-கி.பி. 2000)
- சசியாக்கதை
- யாழ்ப்பாணம் சமூகம் - பண்பாடு,
கருத்துநிலை
விருதுகள்:
- தமிழக அரசு – திரு . வி. க.
விருதினை வழங்கி சிறப்பித்துள்ளது.
- இலங்கை – ஜப்பானிய நட்புறவுக்கழக
விருது.
- உலக அளவிலான புலமையாளர்
பட்டியலில் இவரது பெயரும் இடம்பெற்றுள்ளது – (2000)
இவர்பற்றி:
-
இலங்கைப்
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களைப்
பெற்றார். 'பண்டைய தமிழ்ச் சமூகத்தில் நாடகம்' என்னும் தலைப்பில்
ஆய்வினை மேற்கொண்டு அமெரிக்க பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் முனைவர்
பட்டம் பெற்றார். இவரும், பேராசிரியர் க. கைலாசபதியும் ஈழத்து
இரட்டை அறிஞர்கள் என போற்றப்படுபவர்கள். சிவத்தம்பி அவர்கள்
1978 முதல் யாழ்ப்பாணப் பல்கலைக்
கழகத்தில் பதினேழு ஆண்டுகள் பேராசிரியராக பணிபுரிந்தார். இரண்டு
ஆண்டுகள் கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராகப் பணி
புரிந்தார். சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இங்கிலாந்து,
ஜேர்மனி உள்ளிட்ட பல நாடுகளின் கல்வி நிறுவனங்களில் வருகைதரு
பேராசிரியராகப் பணிபுரிந்தார். தமிழ்ப் பேராசிரியராகவும், பன்மொழி
அறிஞராகவும், கலை விமர்சகராகவும், சிந்தனையாளராகவும், அரசியல் அறிவு
நிரம்பியவராகவும் விளங்குகிறார். மார்க்சிய நோக்கில் திறனாய்வுகளை
மேற்கொள்ளுபவர் கா. சிவத்தம்பி அவர்கள். இவர் ஆய்வாளர் மட்டுமன்றி
சிறந்த நாடக நடிகர், இயக்குனர். பல்கலைக்கழகக் காலத்தில் பல மேடை
நாடகங்களில் நடித்தவர், வானொலி நாடகங்களிலும் நடித்தவர்.
இலங்கையர்கோன் எழுதிய 'விதானையார் வீட்டில்' என்ற தொடர் நாடகத்தில்
இவர் முக்கிய பாத்திரத்தில் நடித்தமை குறிப்பிடத்தக்கது. கூத்து,
நாடக, அரங்கியல் சார்ந்த செய்திகளைப் பாடத்திட்டமாகக் கொண்டுவந்தவர்
இவர். நாட்டாரியலில் அதிக ஈடுபாடு கொண்டவர். யாழ்ப்பாணப்
பல்கலைக்கழகத்தில் இவர் நுண்கலைத்துறைத் தலைவராகப் பணிபுரிந்தபொழுது
அங்கு புதிய நாடக மரபு உருப்பெற்றது. ஈழத்தில் நடிக்கப்பட்டுவந்த
கூத்துக்களின் ஊடாக புதிய நாடகமரபுகளைக் கட்டமைக்கும் முயற்சியில்
சிவத்தம்பி முன்னின்றார்.
|
|
 |
|
|