நடேசையர்.கோ:

பெயர்: கோதண்டராம நடேசையர் (1892 – 1947)
வசித்த இடம்: கண்டி

படைப்புக்கள்:
  • அழகிய இலங்கை – 1933
  • நரேந்திரபூபதியின் நரக வாழ்க்கை – 1933
  • தொழிலாளர் கடமைகளும் உரிமைகளும்
  • தொழிலாளர் சட்ட புஸ்தகம்
  • நீ மயங்குவதேன் - 1941
  • வெற்றியுனதே – 1947

இவர் பற்றி:

  • இவர் 1922 இல் தேசநேசன் பத்திரிகையையும், 1924 இல் தேசபக்தன் பத்திரிகையையும் தொடங்கிவைத்தார். சுதந்திரப் போர் (1940), வீரன் (1942), தோட்டத் தொழிலாளி (1947) ஆகிய சஞ்சிகைகளையும் நடத்திவந்தார். ஆங்கில மொழியில் Indian Opinion, Indian Estate Labourer Citizen, Forward  என்ற மூன்று பத்திரிகைகளையும் நடத்தினார். மனைவியின் துணையோடு சகோதரி பிரஸ், கணேஷ் பிரஸ் என்ற இரு அச்சகங்களை நிறுவி தோட்ட மக்களுக்கு உணர்வூட்டும் பல புரட்சிகரத் துண்டுப்பிரசுரங்களையும், சிறுநூல்களையும் வெளியிட்டு வந்தார். நடேசையர் மொத்தம் ஒன்பது தமிழ் நூல்களையும் இரு ஆங்கில நூல்களையும் வெளியிட்டுள்ளார்.