|
 |
|
கோகிலா மகேந்திரன்
பெயர்:
கோகிலாதேவி மகேந்திரராஜா
புனைபெயர்கள்: விழி, விழிசைக்குயில், பசுந்தி (கோகிலா
மகேந்திரன் - எழுத்துலகில் நிலைத்துவிட்ட பெயர்)
பிறப்பிடம்: விழிசிட்டி,
தெல்லிப்பளை, இலங்கை
(1950)
வசிப்பிடம்: வெள்ளவத்தை, கொழும்பு.
தொடர்புகளுக்கு:
E.Mail: mpiraveenan@yahoo.com |
|
படைப்பாற்றல்:
சிறுகதை, நாவல், கட்டுரை, கவிதை, நாடகங்கள்
படைப்புகள்:
சிறுகதைத் தொகுப்புக்கள்:
-
மனித சொரூபங்கள் - 1982
-
முரண்பாடுகளின் அறுவடை – 1983
-
அறிமுக விழா – 1984
– புலொலியூர் இரத்தின வேலோனுடன் இணைந்து
-
பிரசவங்கள் - 1986
-
வாழ்வு ஒரு வலைப்பந்தாட்டம் -
1997
-
முகங்களும் மூடிகளும் - 2003
விஞ்ஞான நூல்:
நாவல்கள்:
-
துயிலும் ஒரு நாள் கலையும் -
1986
-
தூவானம் கவனம் - 1989
நாடக நூல்கள்:
-
குயில்கள் - இவரது எட்டு நாடகங்கள்
இதில் இடம்பெறுகின்றன – 2001
-
கிரேக்கத்தின் தொல் சீர் அரங்கு
– 1997
-
அரங்கக் கலையில் ஐம்பதாண்டு –
2003
உளவளத்துறை நூல்கள்:
-
எங்கே நிம்மதி (பொது மக்களுக்காக)
-
மனச் சோர்வு (உளவளத்துறையினருக்கு)
உளவளத்துறை சார்ந்த துணை நூல்கள்:
-
சிறுவர் உள நலம் - பேராசிரியர்
டீ.ஜே.சோமசுந்தரம் உளவள மருத்துவ நிபுணர் சிவயோகன் ஆகியோருடன்
இணைந்து
-
மகிழ்வுடன் வாழ்தல் - பேராசிரியர்
டீ.ஜே.சோமசுந்தரத்துடன் இணைந்து பதிப்பாசிரியராக
-
சின்னச் சின்னப் பிள்ளைகள் -
பேராசிரியர் டீ.ஜே.சோமசுந்தரத்துடன் இணைந்து பதிப்பாசிரியராக
-
உள்ளக்கமலம் - உளவளத்துறை ஆசிரியர்களோடு
இணைந்து பிரதம ஆசிரியராக
-
சுனாமியில் சிதறிய சித்திரங்கள்-
உளவளத்துறை ஆசிரியர்களோடு இணைந்து பிரதம ஆசிரியராக
-
முற்றத்தில சிந்திய முத்துக்கள் -
உளவளத்துறை ஆசிரியர்களோடு இணைந்து பிரதம ஆசிரியராக
இவரது நாடகங்களுள் குறிப்பிடத்தக்கவை:
-
பட்டங்கள் மீண்டும் பறக்கும்
-
மீண்டும் நிலவு பொழியும்
-
மலையம் மடற்பனையும்
-
முரண்பாடுகள் - 1997
-
பாலாய் நிலவு பொழியும் - 1999
விருதுகள்:
-
அகில இலங்கை திருக்குறள் மனனப்
போட்டியில் ஏழுவயதில் பங்குகொண்டு பரிசு பெற்றார்.
-
நல்லாசான் விருது (பண்டத்தரிப்புக்கோட்டம்);
- யாழ் மாவட்டக் கல்வித் திணைக்களம் - 1991
-
சாகித்திய மண்டலப் பரிசு, இலக்கிய
வித்தகர் பட்டம் - பிரசவங்கள் - 1986
-
சாகித்திய மண்டலப் பரிசு – வாழ்வு ஒரு
வலைப்பந்தாட்டம்
-
வடக்கு கிழக்கு மாகாண கல்விப்
பண்பாட்டுத்துறை அமைச்சின் விருது – வாழ்வு ஒரு வலைப்பந்தாட்டம்
-
இலக்கியப் பேரவைச் சான்றிதழ் -
முகங்களும் மூடிகளும் நூல் - 2003
-
நாடக கலா வித்தகர் - வட இலங்கைச்
சங்கீத சபை
-
சுடர் சிறுகதைப் போட்டி – 1980,
நீர்பாசனத் திணைக்களத் தமிழ்ப் பண்பாட்டுக் கழகச் சிறுகதைப் போட்டி
– 1985, நோர்வே தமிழ்ச் சங்க
சிறுகதைப் போட்டி – 1986,
முரசொலி குறுநாவல் போட்டி – 1987
ஆகிய போட்டிகளில் இவரது சிறுகதைகள் பரிசு பெற்றுள்ளன.
-
அகில இலங்கை ரீதியாக நடத்தப்பட்ட நாடகப்
போட்டியில் இவர் நடித்த கோமகளும் குருமகளும் என்ற நாடகம் முதல்
இடத்தைப் பெற்றிருந்தது (1960களில்).
-
பேராதனைப் பல்கலைக்கழகம், பலாலி
ஆசிரியப் பயிற்சிக் கலாசாலை நாடக விழாக்களில் சிறந்த நடிகைக்கான
பரிசு பெற்றிருக்கிறார்.
-
இவர் ஆசிரியராக இருந்த காலப்பகுதியில்
பாடசாலை, கோட்ட மட்ட, மாவட்ட மட்ட நாடகப் போட்டிகளில் இவர்
நெறிப்படுத்திய நாடகங்கள் பல பரிசு பெற்றன.
இவர்பற்றி:
- பெண்ணியக் கருத்துக்களை தனது
சிறுகதைகளிலும், நாவல்களிலும் வெளிப்படுத்தியவர். இவர் யாழ்
பல்கலைக்கழகத்தில் நாடகமும் அரங்கியலும் பாடத்துக்காண வருகை தரு
விரிவுரையாளராகப் பணியாற்றியவர். ஒரு ஓய்வு பெற்ற விஞ்ஞான ஆசிரியை.
வலிகாமம் கல்வி வலயத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளராகப்
பணியாற்றியவர். பண்பட்ட நடிகை, நாடக எழுத்தாளர் - நெறியாளர்,
பேச்சாளர், விமர்சகர், உளவளத்துறை ஆலோசகர். 1995
இல் யாழ் மகளிர் சார்பாக சீனாவின் தலைநகர் பீஜிங்களில் நடைபெற்ற
பெண்கள் மாநாட்டில் கவந்துகொண்டார். இங்கிலாந்து ஒக்ஸ்பேர்ட் நகரில்
2002 இல் நடந்த உலக மாணவர்களின்
விழுமியங்கள் தொடர்பான மகாநாட்டில் கலந்துகொண்டு சிறப்புப் பெற்றார்.
|
|
 |
|
|