புஹாரி.எம்.எச்.எம்:
(கலாபூஷணம் மௌலவி எம்.எச்.எம். புஹாரி (பலாஹீ)

பெயர்: மௌலவி எம்.எச்.எம்.புஹாரி
பிறந்த இடம்: காத்தான்குடி
(05.08.1947)

படைப்பாற்றல்: கவிதை, கட்டுரை

படைப்புக்கள்:

கவிதைத் தொகுப்புகள்:

  • புனித றம்ழான் புகழ் பாடல்கள் - 1970
  • நாயகப் புகழாரம் - 1975
  • முத்தாரம் - 1984
  • முழுமதி – 1991
  • நன்நெறி கூறும் நபிமொழி நூறு - 1997

சிறுவர் நூல்கள்:

  • சிறுவர்களுக்கான நபி மொழி நாற்பது – கவிதைத் தொகுப்பு – 1986
  • செழிக்குஞ் செல்வம் - சிறுவர் பாடல்கள் - 1995
  • சாந்தி மார்க்கத் தீர்ப்புகள் - இஸ்லாமிய சமய வினாவிடை - 2002

கட்டுரைத் தொகுப்புகள்:

  • வல்ல அல்லாஹ்வை வணங்கி வாழ்க – 1995
  • வரலாற்றில் ஒரு ஏடு – பாகம் 1, 2 – 1995,1998

விருதுகள்:

  • மீலாத் கவிதைப் போட்டி - இலங்கை முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம்
    - முதலாம் இடம் -
    1982
  • மட்டக்களப்பு மண்ணுக்கு புகழ் சேர்த்த பெரியார் என்ற கௌரவமும், பொன்னாடை போர்த்தலும்
    - மட்டக்களப்பு ஆரத்தி நிறுவனம் -
    1995
  • இலக்கியத்துறைக்கான கலாபூஷண விருது - இலங்கை அரசாங்க கலாச்சார அமைச்சு – 1996

இவர் பற்றி:

  • இவர் காத்தான்குடி நவ இலக்கியத் தலைவராகவும், மட்டக்களப்பு மாவட்ட கலாச்சார பேரவை நிர்வாக உறுப்பினராகவும், மட்டக்களப்பு தமிழ் எழுத்தாளர் பேரவை உறுப்பினராகவும், காத்தான்குடி பிரதேச கலாச்சாரப் பேரவை உறுப்பினராகவும், காத்தான்குடி கலாச்சார நிலைய ஆலோசனை சபை உறுப்பினராகவும் பணியாற்றியவர். பல்வேறு மாநாடுகளில் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்து உள்ளார். இலங்கை வானொலியில் முஸ்லிம் நிகழ்ச்சியில் தினமும் வரலாற்றில் ஒரு ஏடு என்ற நிகழ்ச்சியையும், அல்குர் ஆன் வகுப்பு தொடர் நிகழ்ச்சியையும் நிகழ்த்தினார். தமிழ், முஸ்லிம் நிகழ்ச்சிகளில் கவியரங்குகளும் நடத்தியுள்ளார். ரூபவாஹினியில் இவரது கவியரங்கம், மற்றும் சமய நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகியுள்ளன.