நிழற்படம் இல்லை

மலரன்பன்:

புனைபெயர்: மலரன்பன்


 

படைப்புக்கள்:

சிறுகதைத் தொகுப்பு:
  • கோடிச்சேலை - 1989

விருதுகள்:

  • கோடிச்சேலை - இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு - 1989

இவர் பற்றி:

  • இவர் 1965 களில் எழுதத் தொடங்கியவர். வீரகேசரி மலையகச் சிறுகதைப் போட்டியில் மூன்றுமுறை பரிசு பெற்று, மலையகப் படைப்பாற்றலை இலக்கிய உலகு அறியவைத்தவர். இவரது பல சிறுகதைகளும் பல்வேறு போட்டிகளில் பரிசு பெற்றுள்ளன. சில தனி மரங்களும் ஒரு பெருநெருப்பும் என்பது இவரது முதற்பரிசு பெற்ற குறுநாவல். இவர் சிறந்த வானொலி எழுத்தாளர். நாடகாசிரியர். கவிஞர். மொழிபெயர்ப்பாளர். இசைத்தட்டு, ஒலிநாடாக்களில் இவரது மெல்லிசைப் பாடல்கள் பிரபலம் பெற்றவை. மலரன்பனின் கதைகளில் மலையக வாழ்வின் ஒட்டுமொத்தமான துயரம் மட்டுமல்லாமல் கனன்றெரியும் எதிர்க் குரலும் மனதை அள்ளும் மொழியில் சொல்லப்பட்டிருக்கும். படித்து முடிந்த பின்னரும் அவரது கதைகள் வாசகனின் மனதில் மீண்டும் மீண்டும் நிகழத் தொடங்கிவிடுகின்றது. இது மலரன்பனின் படைப்புத் திறன்.

Copyright© 2009, Tamilauthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil authors (தமிழ் ஆதர்ஸ்).