|
 |
|
மருதூர்வாணன்:
பெயர்: எஸ். எல். லத்தீப்
புனைபெயர்: மருதூர்வாணன்
பிறந்த இடம்: மருதமுனை, இலங்கை (18.09.1939) |
|
படைப்பாற்றல்: சிறுகதை, நாடகம், கவிதை, கட்டுரை
படைப்புகள்:
- முதலிரவு - சிறுகதைத் தொகுப்பு
- சூறாவளி – விவரணம்
- மத்திய கிழக்கிலே - சிறுகதைத்
தொகுப்பு
- பெருநாள் பரிசு – நாவல்
விருதுகள்:
- பத்துவயதில் இவர் எழுதிய கா கா
என்ற கவிதைக்கு முதலாம் பரிசும், குட்டிப் புலவர் என்ற பட்டமும்
புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளை அவர்களால் வழங்கப்பட்டது –
1949
- இசைவாணன் என்ற பட்டம் - புலவர்
ஆ.மு.சரிபுதீன் அவர்கள் வழங்கியது – 1960
- புரட்சிக் கவிவாணர் என்ற பட்டம்
- புரட்சிக் கவிஞர் காவி ஆனந்தனால் வழங்கப்பட்டது – 1973
- சேல்வா பிறந்திலரேல் என்னும்
பொருளில் உலகளாவிய ரீதியில் நடாத்தப்பட்ட கவிதைப் போட்டி –
முதற்பரிசு – 1977
- மக்கள் கவிஞர் என்ற பட்டம் -
கலாநிதி ஈழத்துப் பூராடனார் க.தா.செல்வராசகோபால் அவர்கள் வழங்கியது
– 1980
- ஈழபாரதி என்னும் பட்டமும்
பொன்னாடைக் கௌரவமும் - கவிச்சுடர் அன்பு முகைதீன் அவர்களால்
வழங்கப்பட்டது – 1997
இவர்பற்றி:
- இவர் தேன்மதி, சமாதானம் என்னும்
பத்திரிகைகளின் ஆசிரியர். இவரது கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள்
என்பன பல பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. பல நாடகங்களும்
படைத்துள்ளார். தனது நான்காவது வயதில் அப்துல்லா என்ற நாடகத்தில்
நடித்தவர். தனது எட்டாவது வயதில் மதுரை வீரன், சங்கிலியன்,
யாழ்ப்பாணன் நாடகங்களில் பங்கேற்றவர். இவரது முதலிரவு- சிறுகதைத் தொகுதி
தரமான சிறுகதைகளின் தொகுதியாக 1970
களில் பேசப்பட்டது. மருதூர்வாணனின் சிறுகதைகள் அவர் சார்ந்த அரசியல்
கருத்துக்களைத் துணிச்சலுடனும், சமயக் கருத்துக்களைப் பக்தியுடனும்
பேசுவன.
|
|
 |
|
|