நிழற்படம் இல்லை

மருதூர்க்கனி:

பெயர்: முஹம்மது ஹனிபா
புனைபெயர்: மருதூர்க்கனி
சொந்த ஊர்: மருதமுனை, மட்டக்களப்பு
(1942.10.01)

 

படைப்பாற்றல்:  கவிதை, சிறுகதை, நாடகம்

படைப்புக்கள்:

சிறுகதைத் தொகுப்புகள்:

  • மண்பூனைகளும் எலி பிடிக்கும் - 2002

கவிதைத் தொகுப்பு:

  • அந்த மழைநாட்களுக்காக – 2002

விருதுகள்:

  • 'பசி' சிறுகதை – செய்தி பத்திரிகை நடத்திய சிறுகதைப் போட்டி – முதல் பரிசு
  • கலாபூஷணம் விருது – 2002
  • 'இலங்காதிலக' என்ற விருது - இவருடைய மக்கள் சேவையை பாராட்டி இலங்கையின் அன்றைய ஜனாதிபதியாக விளங்கிய சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்களால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இவர் பற்றி:

  • இவரது பெற்றோர் உதுமாலெப்பை, சுலைஹா உம்மா. உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் தனது கல்வியைப் பயின்றார். அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலையில் ஆசிரியப் பயிற்சி பெற்று ஆசிரியராகப் பணிபுரிந்தவர். இவரது முதல்கவிதை 'நினைவு' 1963 இல் பிரசுரமானது. இவருடைய 'சோழன் மகன்' என்ற கவிதை நாடகம் அகில இலங்கைக்கான போட்டியில் சிறந்த நாடகமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. மக்கள் எப்பொழுதும் சுதந்திரக் காற்றையே சுவாசிக்க வேண்டும் என்று விரும்பினார். முற்போக்கு சிந்தனைகொண்டவராக விளங்கினார். இவரது எழுத்துக்கள் ஒடுக்குமுறைகளுக்கும், சுரண்டல்களுக்கும் எதிராகவே ஒலித்தது. 'என்னை நீங்கள் மன்னிக்க வேண்டும்', சந்தனப் பாட்டகமும் 'கிலாபத்துக்கப்பலும்', 'மருதூர்க்கனி கவிதைகள்' என்ற மூன்று தொகுப்புக்கள் இன்னும் நூலுருப் பெறாத நிலையில் உள்ளன. 'ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்' கட்சி உருவாவதற்கு பெரும் பிரயத்தனம் செய்தார். மருதமுனையின் முதலாவது பாராளுமன்ற உறுப்பினர் என்ற பெருமைக்கு உரியவர் இவர். இவருடைய மக்கள் சேவையை பாராட்டி இலங்கையின் அன்றைய ஜனாதிபதியாக விளங்கிய சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்களால் 'இலங்காதிலக' என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். இவரது 'மண்பூனைகளும் எலிபிடிக்கும்'என்ற சிறுகதை பாடசாலையில் தரம் 11 இற்கான பாடப்புத்தகத்தில் இணைக்கப்பட்டுள்ளது. 2004 செப்டம்பர் மாதம் 23 ஆம் திகதி இறையடி சேர்ந்தார்.

     

Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamilauthors (தமிழ் ஆதர்ஸ்).