நிழற்படம் இல்லை

வடிவேல்.பெ மாத்தளை:

பெயர்: பெ.வடிவேல்
புனைபெயர்: மாத்தளை பெ. வடிவேல்
 

படைப்பாற்றல்: சிறுகதை, நாடகம், கவிதை, நாவல்

படைப்புக்கள்:

நாவல்கள்:

  • நுனிக்கரும்பு
  • தொடுவானம்

சிறுகதைத் தொகுப்பு:

  • வல்லமை தாராயோ? - 1994

விருதுகள்:

  • முதல் பரிசு – அகில இலங்கை நாடகப் போட்டி - 1980

இவர் பற்றி:

  • 1970 களில் எழுதத் தொடங்கியவர். இவர் சிறந்த புனைகதைப் படைப்பாளி மட்டுமல்ல. நாடகாசிரியர், நாட்டாரியல் ஆய்வாளர், கவிஞர். ஆசிரியராகப் பணிபுரிந்தவர். மலையகச் சிறுகதைப் போட்டியில் இவரது சிறுகதையொன்று முதல்பரிசு பெற்றது. அக்னி என்ற இவரது சிறுகதை தகவம் பரிசைப் பெற்றது. ஈழத்தின் எல்லா இதழ்களிலும் இவரது சிறுகதைகள் வெளியாகியுள்ளன. தமிழகத்து தினமணி கதிர், குங்குமம் இதழ்களிலும் வெளியான இவரது கதைகள் பலரதும் பாராட்டைப் பெற்றவை. இவரது சில கதைகள் சிங்களமொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. காமன் கூத்தைப் பற்றி இலங்கையில் நடந்த நாட்டாரியல் மாநாட்டில் தன் ஆய்வை வாசித்தவர் இவர். இவரது இன்னொரு சிறந்த மலையக எழுத்தாளரான மலரன்பனின் சகோதரர்.


Copyright© 2009, Tamilauthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil authors (தமிழ் ஆதர்ஸ்).