நிழற்படம் இல்லை

சிவலிங்கம்.மு:

பெயர்: மு.சிவலிங்கம்

 

படைப்பாற்றல்:  சிறுகதை, நாடகம், ஓவியம், கவிதை

படைப்புக்கள்:

  • மலைகளின் மக்கள் - 1992
  • ஒப்பாரிக்கோச்சி – சிறுகதைத் தொகுப்பு -   2010

விருதுகள்:

  • மலைகளின் மக்கள் - இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு - 1992

இவர் பற்றி:

  • 1962 இல் எழுதத் தொடங்கியவர். வீரகேசரி நிறுவனத்தில் எழுத்தாளராகப் பணியாற்றியவர். சிறந்த காட்ரூனிஸ்ட். நடைச்சித்திரகாரர், பத்திரிகையாளர், தொழிற்சங்கவாதி, திரைப்படக் கலைஞர். 'புதியகாற்று' என்ற இலங்கைத் தமிழ் திரைப்படத் தயாரிப்பில் பங்குகொண்டு முக்கிய பாத்திரமேற்று நடித்தவர். 'ரூட்யாட் கிப்ளிங்கின்'(IF) கவிதையை தமிழாக்கம் செய்தவர். இவர் கவிதைகளும் எழுதுவார். இவரது எழுத்து, மலையகத்தின் ஏனைய எழுத்தாளர்களின் படைப்பைவிட வேறுபட்டு நிற்கின்றது. மலையக மக்களின் 165 ஆண்டுகால வேதனை நிறைந்த வரலாற்றை கலாரீதியாக, உள்ளார்ந்த சோகமும் கோபமும் கொந்தளிக்க இவரது கதைகள் வெளிப்படுத்துகின்றன. ஒரு வரலாற்று ஆவணமாகவே தனது படைப்புக்களை இவர் உருவாக்கி வருகிறார்.


Copyright© 2009, Tamilauthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil authors (தமிழ் ஆதர்ஸ்).